/* */

வாக்கு என்னும் மையங்களின் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படும்: கலெக்டர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து அசைவுகளையும் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

வாக்கு என்னும் மையங்களின் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படும்: கலெக்டர்
X

செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட, கலெக்டர் முருகேஷ் மற்றும் எஸ்பி பவன்குமார் ரெட்டி.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) 8 இடங்களில் நடைபெற உள்ளது. திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணும் மையத்தை திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. திருவண்ணாமலையில் 2 இடத்திலும், ஆரணி, வந்தவாசி, செய்யாறு, செங்கம், போளூர், சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும்.

முதற்கட்டமாக தபால் வாக்கு சீட்டுக்கள் எண்ணப்படும். தொடர்ந்து மின்னணு எந்திரங்கள் மூலம் பதிவான வாக்குகள் வார்டு வாரியாக எண்ணப்படும். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகளின் படியும், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும்.

வாக்கு எண்ணும் மையத்திற்குள் ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் மற்றும் ஒரு தேர்தல் முகவர் அடையாள அட்டையுடன் அனுமதிக்கப்படுவார்கள். நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் என மொத்தமாக 51 மேஜைகளில் 157 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை பணிகள் நடைபெறும். இருப்பு அறையில் வைக்கப்பட்டு உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணும் மேஜைக்கு கொண்டு செல்லும் வரையிலும் அனைத்து அசைவுகளையும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் மொத்தம் 153 அலுவலர்கள், 1600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி, திருவண்ணாமலை நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தசாரதி, திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 22 Feb 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்