/* */

திருவண்ணாமலை ஆரணி தொகுதிகளுக்கு தேர்தல் பொது பார்வையாளர்கள் நியமனம்

திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதி விதிமீறல்கள் தொடர்பாக புகார்களை தேர்தல் பொது பார்வையாளர்களிடம் அளிக்கலாம்

HIGHLIGHTS

திருவண்ணாமலை ஆரணி தொகுதிகளுக்கு தேர்தல் பொது பார்வையாளர்கள் நியமனம்
X

கலெக்டர் பாஸ்கர பாண்டியன் 

திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளுக்கு தேர்தல் பொது பார்வையாளர்கள் நியமனம், விதிமீறல்கள் தொடர்பாக புகார் அளிக்கலாம்,

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்கிறது. அதன்படி, தமிழகத்தில் அடுத்த மாதம் 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அதையொட்டி, வேட்புமனு தாக்கல் 20 ஆம் தேதி தொடங்கி வரும் 27ம் தேதி உடன் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து, இன்று 28 ம் தேதி வேட்புமனு பரிசீலனையும், 30 ம் தேதி மாலை 3 மணி வரை மனுக்கள் வாபஸ் பெற அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. 30ம் தேதி மாலை 5 மணிக்கு, வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்..

இந்நிலையில் திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பொது பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலரும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பொது பார்வையாளர், செலவின பார்வையாளர்கள், பாதுகாப்பு(காவல்) பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

மேலும், பார்வையாளர்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்க வசதியாக செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருவண்ணாமமலை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் செலவின பார்வையாளர் குர்பிரீத் வாலியா (செல்:90429 29964). தேர்தல் பொது பார்வையாளர் மகாவீர் பிரசாத் மீனா (செல் 81229 04303), தேர்தல் பாதுகாப்பு(காவல்) பார்வையாளர் பாட்டுலா கங்காதர் (செல் 81480 02216).

ஆரணி மக்களவைத் தொகதிக்கான தேர்தல் செலவின பார்வையாளர் அப்துல் மதீன்கான் (செல் 90429 67127), பொது பார்வையாளர் சுஷாந்த் கவுரவ் (செல் 81229 53282), பாதுகாப்பு (காவல்) பார்வையாளர் பாட்டுலா கங்காதர் (செல் 81480 02216). எனவே, பொதுமக்கள் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் குறித்த அனைத்து விதமான புகார்களையும் பார்வையாளர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டோ அல்லது அவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் நேரில் சந்தித்தோ தெரிவிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலரும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 28 March 2024 1:02 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  2. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  4. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  5. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  6. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  7. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  8. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  9. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  10. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...