/* */

கிரிவலம் வர வேண்டாம்; திருவண்ணாமலை ஆட்சியர் வேண்டுகோள்

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்கு பக்தர்கள், பொதுமக்கள் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

கிரிவலம் வர வேண்டாம்; திருவண்ணாமலை  ஆட்சியர் வேண்டுகோள்
X

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேகரர் திருக்கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது. பவுர்ணமி நாட்களில் இங்குள்ள 14 கிலோ மீட்டர் கிரிவலப் பாதையில், பல்வேறு மாவட்டம், மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் வலம் வருவார்கள்.

ஆனால், தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு சில தளர்வுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது, நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், கொரோனா ஊரடங்கு இம்மாதம் 31 ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிப்பு செய்து அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பரவல் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் நடைபெறும் நாட்களான இம்மாதம் 23 ம் தேதி (வெள்ளிக்கிழமை) காைல 10.38 முதல் 24 ம் தேதி (சனிக்கிழமை) காைல 8.51 வரை, மலை சுற்றும் பாதையில் 14 கி.மீ. கிரிவலம் வருவதற்கு அனுமதி கிடையாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

Updated On: 21 July 2021 7:09 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  2. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  3. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  4. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  5. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  8. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  9. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!