/* */

திருவண்ணாமலையில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

திருவண்ணாமலையில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தக்கோரி அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
X

திருவண்ணாமலையில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அருண்பாட்சா தலைமை தாங்கினார்.

துணைத்தலைவர் சோணாசலம் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ராஜா போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணி கோரிக்கைகளை விளக்கி பேசினார். சிறப்பு விருந்தினராக மாநில துணைத்தலைவர் இளமாறன் கலந்துகொண்டு பேசினார்.

போராட்டத்தில் 1.1.2022 முதல் 3 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தின் மருத்துவ செலவை திரும்பப்பெற அளிக்கப்பட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் மீது தமிழக அரசு விரைவாக தீர்வு காண வேண்டும்.

சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர், வருவாய் கிராம ஊழியர், வனக்காவலர், கிராமப்புற நூலகர்களாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும்.

தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.

Updated On: 18 May 2022 1:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  2. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  4. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  6. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  7. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...
  8. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  10. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு