/* */

மக்கள் நீதிமன்றத்தில் 820 வழக்குகள் முடித்து வைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 820 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

மக்கள் நீதிமன்றத்தில் 820 வழக்குகள் முடித்து வைப்பு
X

திருவண்ணாமலை மக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 820 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, ரூ.6 கோடியே 95 லட்சத்து 93 ஆயிரத்து 546-க்கு தீர்வு காணப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் செய்யாறு, வந்தவாசி, போளூர், ஆரணி, கலசபாக்கம், தண்டராம்பட்டு, செங்கம் ஆகிய 7 தாலுகா நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் திருவண்ணாமலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த நிகழ்ச்சியை சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான திருமகள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஹேமலதாடேனியல், நிரந்திர மக்கள் நீதிமன்ற நீதிபதி பரிமளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், தலைமை குற்றவியல் நடுவர் நீதிபதியுமான ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். இதில் போக்சோ நீதிமன்ற நீதிபதி வசந்தி, சிறப்பு சார்பு நீதிபதி (எம்.சி.ஓ.பி.) ஜகனாதன், கூடுதல் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி சுபாஷினி, நீதித்துறை நடுவர்கள் கவியரசன், பாக்கியராஜ், அன்ஸ்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்கள் தங்களது வழக்கறிஞர்களுடன் வந்து கலந்து கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் அனைத்து வங்கி சார்ந்த வழக்குகள், காசோலை வழக்குகள், சிவில் வழக்குகள் மற்றும் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் என மொத்தம் 4,818 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில் 820 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு அதன் மூலம் ரூ.6 கோடியே 95 லட்சத்து 93 ஆயிரத்து 546-க்கு தீர்வு காணப்பட்டது.

Updated On: 11 Sep 2021 4:23 PM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  3. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  4. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  5. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  6. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  7. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  8. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  9. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  10. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!