/* */

பரணி, மகா தீப தரிசன கட்டண டிக்கெட்டுகள்: நாளை விற்பனை துவக்கம்

பரணி தீபம், மகா தீப தரிசனத்துக்கான 1,600 கட்டண தரிசன டிக்கெட்டுகளின் ஆன்லைன் விற்பனை நாளை காலை 10 மணிக்குத் தொடங்குகிறது.

HIGHLIGHTS

பரணி, மகா தீப தரிசன கட்டண டிக்கெட்டுகள்:  நாளை விற்பனை துவக்கம்
X

பைல் படம்

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பரணி தீபம், மகா தீப தரிசனத்துக்கான 1,600 கட்டண தரிசன டிக்கெட்டுகளின் ஆன்லைன் விற்பனை வெள்ளிக்கிழமை (நவ.24) காலை 10 மணிக்குத் தொடங்குகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா நவம்பா் 26-ஆம் தேதி நடைபெறுகிறது.

அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

இந்த நிலையில், பரணி தீப தரிசனத்தைக் காண ரூ.500 கட்டணத்தில் 500 அனுமதிச் சீட்டுகளும், மகா தீப தரிசனத்தைக் காண ரூ.600 கட்டணத்தில் 100 அனுமதிச் சீட்டுகளும், ரூ.500 கட்டணத்தில் 1,000 அனுமதிச் சீட்டுகளும் என மொத்தம் 1,600 அனுமதிச் சீட்டுகள் இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

இணையதள முகவரி https//annamalaiyar.hrce.tn.gov.in

என்ற இணையதள முகவரி வழியாக பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 24ஆம் தேதி அன்று காலை 10 மணி முதல் வெளியிடப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் நிபந்தனைகள் வருமாறு:

இந்தக் கட்டண அனுமதிச் சீட்டுகளைப் பெற விரும்புவோா் தங்களது ஆதாா் அடையாள அட்டை, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

ஒரு ஆதாா் அட்டைக்கு ஒரு கட்டண அனுமதிச் சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும். கட்டண அனுமதிச் சீட்டு பதிவு செய்தவுடன் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் எண் (ஓ.டி.பி.) குறுஞ்செய்தி பதிவு செய்தவரின் கைபேசி எண்ணுக்கு வரும்.

கட்டண அனுமதிச் சீட்டு பதிவுக்கு பயன்படுத்தப்படும் அதே மின்னஞ்சல் வழியாக கட்டணச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அனுமதிச் சீட்டு (டிக்கெட்) பதிவிறக்கம் செய்து பரணி தீப தரிசனத்துக்கு வரும் பக்தா்கள் நவம்பா் 26-ஆம் தேதி அதிகாலை 2 மணி முதல் 3.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவா்.

மகா தீப தரிசனத்துக்கு வரும் பக்தா்கள் நவம்பா் 26-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 3.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவா்.

மேற்கண்ட இரண்டு தீப நிகழ்வுகளை காண வரும் பக்தர்கள் அசல் கட்டண சீட்டு மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றுடன் குறிப்பிட்ட நேரத்திற்கு திருக்கோயில் கிழக்கு ராஜகோபுரம் திட்டி வாயில் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு வருகை தவறும் பக்தர்கள் கண்டிப்பாக அனுமதிக்க இயலாது.

இணையதள வழியாக கட்டண சீட்டுகளை பதிவிறக்கம் செய்து வருகை தர இருக்கும் பக்தர்கள் மேலே குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றி திருக்கோயிலுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் பக்தா்கள் தீபத் திருவிழா தொடா்பான விவரங்களை அறிந்து கொள்ள வசதியாக 1800 425 3657 என்ற இலவச தொலைபேசி எண்ணை மாவட்ட நிா்வாகம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த எண்ணில் தொடா்பு கொண்டு தீபத் திருவிழா தொடா்பான விவரங்களைப் பெறலாம்.

அருணாசலேஸ்வரா் கோயிலின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள கியூ ஆா் கோடு பலகையைப் பயன்படுத்தி பக்தா்கள் நன்கொடைகளை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

மகா தீப பிராா்த்தனை நெய் காணிக்கை செய்ய விரும்பும் பக்தா்கள் வசதிக்காக ராஜகோபுரம் (கிழக்கு கோபுரம்) அருகே உள்ள திட்டிவாயிலில் பொருள்கள் பாதுகாப்பு அறை, திருமஞ்சன கோபுரம் (தெற்கு கோபுரம்) நுழைவு வாயில் ஆகிய இடங்களில் நெய்குட காணிக்கை செலுத்துவதற்கான கட்டணச் சீட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இடங்களில் பக்தா்கள் சென்று நெய் காணிக்கை செலுத்தலாம்.

நவம்பா் 26-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஏற்றப்படும் பரணி தீபம், மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் மகா தீபம் போன்ற நிகழ்வுகள் பெரிய திரை வாயிலாக கோயில் வளாகத்துக்குள் 4 இடங்கள், கோயில் கோபுரங்கள் எதிரில், தற்காலிகப் பேருந்து நிலையங்கள், நகரின் முக்கிய பகுதிகளில் 20 என மொத்தம் 24 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

கோயிலில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், திருவிழாக்களை கோயிலின் இணையதளம் மூலம் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பக்தா்கள் நேரலையில் தீபத் திருவிழா நிகழ்வுகளைக் காணலாம் என்று மாவட்ட ஆட்சியா் முருகேஷ் தெரிவித்துள்ளாா்.

Updated On: 23 Nov 2023 1:31 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு