/* */

திருவண்ணாமலை நகரை தூய்மைப்படுத்த பேட்டரி வாகனங்கள்

திருவண்ணாமலை நகரை தூய்மைப்படுத்த தூய்மை காவலர்களுக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

திருவண்ணாமலை நகரை தூய்மைப்படுத்த பேட்டரி வாகனங்கள்
X

பேட்டரி வாகனங்களை வழங்கிய தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் கம்பன்

திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளில் உள்ள குப்பைகளை தினந்தோறும் சேகரிக்க ஏற்படும் இன்னல்களை குறைக்கும் வகையிலும், நகரை தூய்மையாக்கும் வகையிலும், தூய்மை அருணை சார்பில் தூய்மை அருணை அமைப்பாளர், அமைச்சர் எ. வ. வேலு தலைமையில் திருவண்ணாமலையில் உள்ள குப்பைகளை அள்ளுவதும், சாலைகளில் இரு புறங்களிலும் மரங்கள் நட்டு பராமரிப்பதும், நகரை அழகு படுத்துவது உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் தூய்மை அருணை அமைப்பின் சார்பில் வீடுகளில் மக்கும் மற்றும் மக்கா குப்பை என தனித்தனியாக பிரித்து சேகரிக்க 20 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டு பணியாளர்களையும் தூய்மை அருணை அமைப்பே நியமித்துள்ளது.

அதன்படி காந்தி ஜெயந்தி தினமான நேற்று தூய்மையை உணர்த்தும் வகையில் தூய்மை அருணை சார்பில் மாசு ஏற்படாத வகையில் ரூபாய் 40 லட்சம் மதிப்பில் குப்பைகளை சேகரிக்கும் 20 புதிய பேட்டரி வாகனங்களை தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர், மாநில மருத்துவர் அணி செயலாளர் எ. வ. வே. கம்பன் நகராட்சி பயன்பாட்டிற்கு வழங்கினார்.

மேலும் நகராட்சி சார்பில் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் குப்பைகளை கொண்டு செல்லும் டாட்டா ஏசி வாகனத்தை நகராட்சி சார்பில் குப்பை அள்ளும் தூய்மை காவலர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், நகர மன்ற துணைத் தலைவர் ராஜாங்கம், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஸ்ரீதரன், கார்த்தி வேல்மாறன், பிரியா விஜயரங்கன், வழக்கறிஞர் சீனிவாசன், ஆறுமுகம், குட்டி புகழேந்தி, காலேஜ் ரவி, சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் அரவிந்தன், நகர மன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட தூய்மை அருணை நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Oct 2023 2:52 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  2. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  5. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  6. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  7. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை