/* */

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி

திருவண்ணாமலையில் வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி
X

கலெக்டர் தலைமையில் நடைபெற்ற வாக்களிப்பது அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினம் திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்காளா்களையும் விடுபடாமல் வாக்களிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக மாவட்ட நிா்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.

அதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி துறை, மகளிர் சுய உதவிக் குழுக்கள், வேளாண்மை துறை மூலம் வாக்காளர்களுக்கு வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பொதுமக்கள் தேர்தல் அன்று தவறாமல் வாக்களிக்க வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் வழங்கியும், விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டியும், வாக்காளர் வாக்காளர் உறுதிமொழி ஏற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

விழிப்புணர்வு பேரணி

இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை நகராட்சி அண்ணா நுழைவாயில் அருகில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேலும் அரசுத்துறை அலுவலர்களுடன் நடைபெற்ற தொடர் ஓட்டம் ஈசானிய மைதானத்தில் தொடங்கி அவலூர்பேட்டை சாலையில் நிறைவுற்றது.

அப்போது சுய உதவி குழுக்களுடன் சுய படம் எடுத்து தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என எடுத்துரைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

குடவோலை தேர்தல் முறை

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து 'குடவோலை தேர்தல் முறை” சிற்பத்தின் ஓவியம் மற்றும் கல்வெட்டு குறிப்புடன் பதாகை அமைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் விதமாக கையெழுத்து இயக்கத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், அவர்கள் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

முதல் முறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முதல் முறை வாக்காளர்களுக்கான தூதுவர்களை நியமித்து வாக்குச்சாவடி மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், அவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, அரசு துறை அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முதல் முறை வாக்காளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 April 2024 2:14 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!