/* */

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாடாளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கோலத்தினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்

இந்திய மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயகத்தின் கடமையான வாக்களிக்கும் உரிமையை அறிவுறுத்தும் வகையில் பொதுமக்களிடையே 100 சதவீத வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி துறை, மகளிர் சுய உதவிக் குழுக்கள், வேளாண்மை துறை மூலம் வாக்காளர்களுக்கு வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரையப்பட்ட விழிப்புணர்வு கோலத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் சிறுதானியங்கள், மலைத்தேன், புவிசார் குறியீடு பெற்ற ஜடேரி நாமக்கட்டி, ஆவூர் பாய் , மலைவாழை, காய்கறிகள் உள்ளிட்ட 250 வகைகள் கொண்ட பொருட்களைக் கொண்டு பல்வேறு வகையான விழிப்புணர்வு கோலங்கள் வரையப்பட்டு விழிப்புணர்வை மகளிர் சுய உதவி குழுவினர் ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் ரிஷப், மகளிர் மேம்பாட்டு திட்ட இயக்குனர் மற்றும் அலுவலர்கள் சுய உதவி குழு உறுப்பினர்கள், தேர்தல் அதிகாரிகள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கிராமத்தில் வாக்காளா் உறுதிமொழி

செய்யாற்றை அடுத்த குண்ணத்தூா் கிராமத்தில் வாக்காளா் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. செய்யாறு ஒன்றியம், குண்ணத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சாா்பில் நடைபெற்ற இந்த வாக்காளா் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் மேற்பாா்வையாா் ரேணுகாதேவி தலைமை வகித்தாா்.

அப்போது, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து, இந்திய குடிமக்களாகிய நாம், நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும், ஒவ்வொரு தேர்தலிலும், அச்சமின்றியும் மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகிய தாக்கங்களுக்கு ஆள்படாமலும், எவ்வித தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்று கூறி பள்ளி மாணவா்கள் முன் கிராம மக்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியா் சரவணன், அங்கன்வாடி பணியாளா்கள் சுதா, லாவண்யா மற்றும் பள்ளி ஆசிரியா்கள், கிராம மக்கள் என பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 29 March 2024 3:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  3. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  4. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  5. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  6. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  7. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  9. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  10. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்