/* */

அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.55 கோடி

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ 2.55 கோடி செலுத்தியுள்ளனர்.

HIGHLIGHTS

அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.55 கோடி
X

உண்டியல் எண்ணும் பணியில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் சிவனின் அக்னி ஸ்தலமான அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான உள்ளூா், வெளியூா், வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தா்கள் வந்து, செல்கின்றனா்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோவில், அஷ்டலிங்க கோவில்கள், திருநேர் அண்ணாமலையார் கோவில் மற்றும் துர்க்கை அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உண்டியல் வைக்கப்பட்டு பக்தர்களிடம் காணிக்கை பெறப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக உண்டியலில் பணம், வெள்ளி, தங்கம் போன்றவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி கிரிவலத்துக்கு பிறகு உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு, வங்கியில் செலுத்துவது வழக்கம்.

பங்குனி மாதத்திற்கான பௌர்ணமி கடந்த மாதம் 23, 24 தேதிகளில் நடைபெற்றது. அன்று சிறப்பான பங்குனி உத்திர விழாவும் அண்ணாமலையார் திருக்கல்யாண விழாவும் இணைந்து வந்ததால் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

அதன்படி பங்குனி மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று வியாழக்கிழமை காலை 8 மணி முதல் இரவு வரை நடைபெற்றது.

கோவில் இணை ஆணையர் ஜோதி தலைமையில் அறங்காவலர் குழுத் தலைவர் ஜீவானந்தம் மற்றும் அறங்காவலர்கள் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள் ஆகியோர் முன்னிலையில் 100 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டன.

அப்போது, கோவில் உண்டியலில் பக்தர்கள் ரூ.2 கோடியே 55 லட்சத்து 2 ஆயிரத்து 820 காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 265 கிராம் தங்கம், 2.32 கிலோ வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அதேபோல், வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியலில் செலுத்தப்பட்டிருந்தது. பின்னர், உண்டியல் காணிக்கை தொகை, கோவில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது.

அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, ஒவ்வொரு மாதமும் உண்டியல் காணிக்கையும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Updated On: 5 April 2024 12:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  4. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  5. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  6. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  7. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  8. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  9. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  10. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...