/* */

திருவண்ணாமலை மாவட்ட அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு
X

திருவண்ணாமலை மாவட்ட  கலெக்டர் முருகேஷ் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட நொச்சிமலை பகுதியில் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பர்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது நொச்சிமலை ஏரி பகுதியை பார்வையிட்டு ஏரிக்கு வரும் வரத்து கால்வாய்களை 100 நாள் திட்டத்தின் மூலம் தூர்வார அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து அவர் அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டார்.

அப்போது குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கும் பொருட்கள் தரமாகவும், சுத்தமாகவும் உள்ளதா என்று ஆய்வு செய்தார். மேலும் அங்கிருந்த ரேஷன் கடையையும் அவர் ஆய்வு செய்தார். அப்போது பொருட்கள் சரியாக வினியோகம் செய்யப்படுகிறதா என்று பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

அங்கன்வாடி மற்றும் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது பள்ளி மாணவர்களிடம் கற்றல் மற்றும் வாசித்தல் திறன் குறித்து அவர் கேட்டறிந்தார்.

ஆய்வின் போது உதவி கலெக்டர் வெற்றிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் அமீர்தராஜ், தாசில்தார் சுரேஷ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் இயங்கி வரும் மாணவியர்களின் விடுதி ரூபாய் 39.90 லட்சம் மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்ட கட்டிடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி, கூடுதல் ஆட்சியர் பிரதாப், மாவட்ட விளையாட்டு இளைஞர் நலத்துறை அலுவலர் நான்சி மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 6 April 2022 5:25 AM GMT

Related News