போளூா் அருகே 3 ஆயிரம் லிட்டா் சாராய ஊறல், 60 லிட்டா் கள்ளச் சாராயம் அழிப்பு

போளூா் அருகே மிளகாய்நாஸ் ஓடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லிட்டா் சாராய ஊறல், 60 லிட்டா் கள்ளச் சாராயத்தை போலீஸாா் கண்டறிந்து அழித்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
போளூா் அருகே 3 ஆயிரம் லிட்டா் சாராய ஊறல், 60 லிட்டா் கள்ளச் சாராயம் அழிப்பு
X

கள்ளச்சாராயத்தை கண்டறிந்து அழித்த போலீசார்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே மிளகாய்நாஸ் ஓடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லிட்டா் சாராய ஊறல், 60 லிட்டா் கள்ளச் சாராயத்தை போலீஸாா் கண்டறிந்து அழித்தனர்.

மாவட்ட காவல் கண்கணிப்பாளா் காா்த்திகேயன் உத்தவின்படி, மதுவிலக்க அமலாக்கப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ரமேஷ்ராஜ் ஆலோசனையின் பேரில், போளூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் கே.புனிதா தலைமையில் போலீஸாா் மிளகாய்நாஸ் ஓடையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, முள்புதரில் இருந்த 3 ஆயிரம் லிட்டா் சாராய ஊறல், 60 லிட்டா் கள்ளச் சாராயத்தை கண்டறிந்து அதை கீழே கொட்டி அழித்தனர்.

மேலும் இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பி.எஸ்.என்.எல். ஊழியருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா தேவிகாபுரம் பாகாயத் தோட்ட தெரு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 56), ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ந் தேதி 8 வயதுடைய மனவளர்ச்சி குன்றிய, வாய் பேச முடியாத சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குணசேகரனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மைதிலி வாதாடினார். இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார்.

அதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குணசேகரனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Updated On: 25 Nov 2022 2:18 AM GMT

Related News

Latest News

 1. உலகம்
  கொலம்பியா நிலச்சரிவு: உயிரிழந்த 34 பேரில் எட்டு சிறுவர்கள்
 2. தென்காசி
  தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் வருகை: பாதுகாப்பு குறித்து தென்மண்டல...
 3. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
 4. திருவில்லிபுத்தூர்
  தொடர் மழை: சதுரகிரிமலை சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல...
 5. தொழில்நுட்பம்
  எலோன் மஸ்க் பயன்படுத்தவுள்ள நியூராலிங்க் தொழில்நுட்பம் என்றால்
 6. விளையாட்டு
  உலகக்கோப்பை கால்பந்து: காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில்
 7. திருவண்ணாமலை
  கார்த்திகைத் தீபத் திருவிழா: சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார்...
 8. திருவண்ணாமலை
  அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது
 9. இந்தியா
  சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு.. தீவிர சோதனைக்குப் பிறகே பக்தர்கள்...
 10. தூத்துக்குடி
  தூத்துக்குடி மாவட்டத்தில் பாலித்தீன் பைகளில் உணவுப் பொருட்களை...