/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2,461 வழக்குகளுக்கு தீர்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்ற விசாரணை மூலம் 2,461 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2,461 வழக்குகளுக்கு தீர்வு
X

திருவண்ணாமலை தலைமை நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி திருமகள் தலைமை வகித்து   தொடக்கி வைத்தார். 

மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று மாவட்டத்தில் உள்ள தலைமை மற்றும் கிளை நீதிமன்றங்களில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

திருவண்ணாமலை தலைமை நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி திருமகள் தலைமை வகித்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார்.தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். இதில் பார் அசோசியேசன் தலைவர் மற்றும் துணைத்தலைவர், அரசு வழக்கறிஞர் மனோகரன், மூத்த வழக்கறிஞர் டி ஆர் எஸ். சீனிவாசன், மூத்த வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை வழக்குகள், சொத்து சம்பந்தமான வழக்குகள், வங்கியில் விவசாய கடன் மற்றும் கல்விக்கடன் பெற்ற வாராக் கடன் வழக்குகள் போன்ற 5,875 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டன. இதில் 2,461 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடாக ரூ.9 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரத்து 439 வழங்கப்பட்டது.

இதே போல, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடந்தது. ஆரணி வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான க.ஜெயவேல் தலைமை தாங்கினார். மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பி.டி. சதீஷ் குமார் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் சங்க தலைவர் எஸ்.ஸ்ரீதர் வரவேற்றார்.

மக்கள் நீதிமன்றத்தில் பாண்டு வழக்குகள், வங்கி நீண்ட கால நிலுவை பாக்கி வழக்குகள், சிறு வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்கு, சொத்து வழக்கு போன்றவை உள்பட 489 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மூலம் ரூ.2 கோடியே 76 லட்சத்து 62 ஆயிரத்து 501-க்கு தீர்வு காணப்பட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மக்கள் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்க செயலாளர் பாலாஜி, அமர்வு வக்கீல் ஏ. சிகாமணி, அரசு வக்கீல்கள் கே.ஆர்.ராஜன், கே.ராஜமூர்த்தி, கைலாஷ், வக்கீல் சங்க முன்னாள் தலைவர்கள் வி.வெங்கடேசன், எஸ்.தனஞ்செழியன், எம். மூர்த்தி, சரவணன் உள்பட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட சட்டப்பணிகள் குழு நிர்வாக அலுவலர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

Updated On: 13 March 2022 2:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    2 மாத திருமண ஆண்டு விழா வாழ்த்துக்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  4. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  9. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  10. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?