/* */

பிளஸ் 2 தமிழ் தேர்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 2000 பேர் ஆப்சென்ட்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பிளஸ் 2 தமிழ்தேர்விற்கு 2273 பேர் எழுத வரவில்லை

HIGHLIGHTS

பிளஸ் 2 தமிழ் தேர்வு:  திருவண்ணாமலை மாவட்டத்தில்  2000 பேர்  ஆப்சென்ட்
X

பிளஸ்-2 தேர்வு மையத்தில் ஆய்வு செய்த கலெக்டர் முருகேஷ்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறுவது வழக்கம். இதில் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பருவ தேர்வாகவும், 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வாகவும் நடைபெறுகிறது.

பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணையின் படி பிளஸ்-2 மாணவர்களுக்கு மார்ச் 13 முதல் ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரையும், பிளஸ்-1 மாணவர்களுக்கு 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்ரல் மாதம் 5-ந்தேதி வரையும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் செய்யாறு கல்வி மாவட்டத்தில் 51, திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 69 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்களில் 30,427 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த தேர்விற்காக மாவட்டத்தில் 130 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு மையங்களில் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மேலும் தனித்தேர்வர்களுக்கு 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

முதல் நாளான நேற்றுமுன்தினம் தமிழ் தேர்வு நடந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 30 ஆயிரத்து 427 பள்ளி மாணவ, மாணவிகளில் 28 ஆயிரத்து 154 பேர் தேர்வு எழுதினர். தமிழ் தேர்வை. 2,273 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வு மையங்களில் 127 முதன்மை கண்காணிப்பாளர்கள், 140 துறை அலுவலர்கள், 138 பறக்கும் படையினர், 1,875 அறை கண்காணிப்பாளர்கள், 485 சொல்வதை எழுதுபவர்கள், 31 வழித்தட அலுவலர்கள், 5 தொடர்பு அலுவலர்கள், 10 மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர்கள், 125 எழுத்தர்கள் மற்றும் 125 அலுவலக உதவியாளர் என மொத்தம் 3 ஆயிரத்து 61 பேர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

அனைத்து தேர்வு மையங்களிலும் தடையில்லாத மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் பஸ் வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தரைத்தளத்திலேயே தேர்வெழுத போதிய அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

மேலும் மாற்று திறன் கொண்ட மாணவர்களுக்காக சொல்வதை எழுதுபவர்கள் 485 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் தேர்வுகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய போதிய காவல்துறை பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன மேலும் 138 பறக்கும் படை உறுப்பினர்களை கொண்டு தேர்வு நடத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தொடங்கிய பிளஸ்-2 தேர்வை கலெக்டர் முருகேஷ் திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றிற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Updated On: 14 March 2023 5:21 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு
  7. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  10. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு