/* */

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணிக்கு விண்ணப்பிக்க 17 ஆம் தேதி கடைசி நாள்

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பல்நோக்கு பணியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்க வருகிற 17-ந்தேதி கடைசி நாள் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணிக்கு விண்ணப்பிக்க 17 ஆம் தேதி கடைசி நாள்
X

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பல்நோக்கு பணியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்க வருகிற 17-ந்தேதி கடைசி நாள் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் , வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பல்நோக்கு பணியாளர்கள் (தொழில்நுட்பம் அற்றது) 10 ஆயிரத்து 880 பேரும், அவில்தார் இன் சி.பி.ஐ.சி. அண்ட் சி.பி.என். 529 பேரும் என மொத்தம் 11 ஆயிரத்து 409 பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி.- எம்.டி.எஸ். போட்டி தேர்வுகள் மூலம் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக இளைஞர்கள் மத்திய அரசு பணியில் சேர இது அரிய வாய்ப்பாகும். 10-ம் வகுப்பு முடித்த 18 வயது முதல் 27 வயதிற்கு உட்பட்ட வேலை நாடுநர்கள் இந்த தேர்வை தமிழிலும் எழுதலாம். இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கடைசி நாளாகும். எஸ்.டி. பிரிவினர்களுக்கு 5 ஆண்களும், ஓ.பி.சி. பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பொது பிரிவினர்களுக்கு 10 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர்களுக்கு 15 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி ஓ.பி.சி. பிரிவினர்களுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகைகளும் உண்டு மற்றும் விதவைகள் 35 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

இந்த தேர்விற்கு பெண்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்கள் இலவசமாக விண்ணப்பிக்கலாம். மற்றவர்கள் விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் கூடுதல் விவரங்கள் https://ssc.nic.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம். திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கி நடத்தப்பட்டு வருகின்றது.

இப்பயிற்சி வகுப்புகள் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வார நாட்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும். வாரம்தோறும் மாதிரி தேர்வுகளும், இலவச பாடக் குறிப்புகளும் வழங்கப்படும். எனவே இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள ஆர்வமும், விருப்பமும் உள்ளவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம்.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

Updated On: 3 Feb 2023 12:26 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  4. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  7. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  10. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!