/* */

திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்

Today Crime News in Tamil -சேலையால் கழுத்தை இறுக்கி, பெண்ணை கொலை செய்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்
X

பெண்ணை கொலை செய்த லாரி டிரைவர் கைது

Today Crime News in Tamil -பஸ்சில் மாணவர்கள் ரகளை; எச்சரித்த போலீசார்

திருவண்ணாமலை மாவட்டம், போளுரில் இருந்து சேத்துப்பட்டு, பெரணமல்லூர், செய்யார், சென்எனைக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் காலை, மாலை, இரு வேளையிலும் கல்லூரி நேரத்தில் செல்வதால் செய்யாறு, அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 70-க்கும் மேற்பட்டோர் இந்த பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர். நேற்று வழக்கம்போல் மாலை செய்யாறில் இருந்து பெரணமல்லூர், சேத்துப்பட்டு, வழியாக போளூர் நோக்கி பஸ் புறப்பட்டது. பஸ்சில் வழக்கம் போல், 70-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர்.

பஸ்சில் வந்த கலை கல்லூரி மாணவர்கள் ஒலி, எழுப்பியவாறு ரகளை செய்தும் ஒலிபெருக்கி மூலம் பாடல்கள் வைத்தும் பயணிகளுக்கும், டிரைவர், கண்டக்டருக்கு, இடையூறு செய்தனர். தொடர்ந்து இதை கண்டித்த டிரைவர், கண்டக்டர், இருவரும் மாணவர்களை எச்சரித்தனர்.ஆனால் மாணவர்கள் ரகளை செய்வதை நிறுத்தாமல் தொடர்ந்து இடையூறு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த பஸ் டிரைவர் பெரணமல்லூர், போலீஸ் ஸ்டேஷன் முன்பு திடீரென பஸ்சை நிறுத்திவிட்டு, ஸ்டேஷனுக்குள் சென்று மாணவர் ரகளை குறித்து, புகார் அளித்தார்.

உடனடியாக கல்லூரி மாணவர்களை போலீசார் அழைத்து பயணிகளுக்கும், டிரைவருக்கும், ஓட்டுனருக்கும் தொந்தரவு தரக்கூடாது ஒலிபெருக்கி மூலம் பாடல்களை அதிக ஒலி வைத்து மற்றவர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது. மேலும் மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர். பின்னர் பஸ் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

பெண் கொலையில் கள்ளக்காதலன் கைது

திருவண்ணாமலை காட்டுப்பகுதி அருகே, பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். தகவல் அறிந்த திருவண்ணாமலை தாலுாகா போலீசார், விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர் . முதல் கட்ட விசாரணையில், அந்தப் பெண்ணின் பெயர் நதியா, சென்னையில் வசித்தார் என தெரிய வந்தது.

இவர் தன் கணவர் மற்றும் இரு குழந்தைகளையும் விட்டுவிட்டு, தண்டராம்பட்டு அருகே வசிக்கும் தங்கராஜ் என்பவரோடு, தொடர்பு கொண்டு இங்கே வந்ததாக தெரிகிறது. தொடர்ந்து விசாரித்த போலீசார், தங்கராஜை கைது செய்து தீவிர விசாரணை செய்தனர்.

திருவண்ணாமலை அருகே கண்ணக்குருக்கை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ், வயது 36, லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவருக்கும், சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி மனைவி நதியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், தங்கராஜ், நதியா இடையே முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டு, இது நாளடைவில் தகாத உறவாக மாறியதாக தெரிகிறது. தங்கராஜ் வேலைக்காக சென்னைக்கு செல்லும் போது, நதியாவை சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. நதியாவின் கள்ளக்காதலை அறிந்த பார்த்தசாரதி, அதை கைவிடுமாறு கூறியுள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நதியா, கணவா், மகன்களை விட்டுவிட்டு கண்ணக்குறுக்கை கிராமத்துக்கு வந்துள்ளாா். பின்னா் தங்கராஜை சந்தித்து, 'இனிமேல் உன்னுடன்தான் வாழ்வேன்' என்று கூறினாராம்.

அதிா்ச்சியடைந்த அவா், பெரியகோளாப்பாடி பகுதியில் உள்ள மலைக்குன்றுக்கு நதியாவை அழைத்துச் சென்று சமாதானம் செய்துள்ளாா். இரவு 11 மணி வரை சமாதானம் செய்தும், அவா் திரும்பி சென்னைக்குச் செல்ல மறுத்துவிட்டாராம்.

இதனால் ஆத்திரமடைந்த தங்கராஜ், நதியாவை சேலையால் கழுத்தை இறுக்கியதால் மூச்சுத்திணறி அவா் உயிரிழந்தாா். தங்கராஜ் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டாா். இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை தாலுாகா போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தலைமறைவான தங்கராஜை, போலீஸாா் கைது செய்தனா்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 18 Oct 2022 9:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  3. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  5. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  8. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  9. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  10. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...