கலசப்பாக்கம் அருகே 100 நாள் வேலை கேட்டு மக்கள் சாலை மறியல்
கலசப்பாக்கம் அருகே 100 நாள் வேலை கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
HIGHLIGHTS

கடலாடி - செங்கம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஏரி கால்வாய் தூர்வாருதல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே உள்ள கடலாடியில் கடந்த 2 மாதமாக 100 நாள் வேலை வழங்க வில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் கடலாடி- செங்கம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த வந்த கடலாடி காவல்துறை ஆய்வாளர் மற்றும் கலசப்பாக்கம் பிடிஓ உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் சமரசம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதனால் கடலாடி - செங்கம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.