செய்யாறு அருகே வாகனம் மோதி டேங்க் ஆபரேட்டர் பலி

செய்யாறு, தூசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி டேங்க் ஆபரேட்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
செய்யாறு அருகே வாகனம் மோதி டேங்க் ஆபரேட்டர் பலி
X

பரிதாபமாக உயிரிழந்த முருகன்

செய்யாறு அருகே வெண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகன், டேங்க் ஆபரேட்டர். இவர் நேற்று நீரேற்று அறைக்கு சைக்கிளில் சென்றார். வெம்பாக்கம் கூட்டு ரோட்டில் சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் சைக்கிள் மீது மோதியது. இதில் முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த தகவல் அறிந்த உறவினர்கள் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு, எஸ் ஐ முத்துக்குமாரசாமி மற்றும் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விபத்தை ஏற்படுத்திய வரை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் சடலத்தை போலீஸார் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 29 March 2022 1:30 AM GMT

Related News

Latest News

 1. அரசியல்
  மேகதாது அணை விவகாரம்: ஸ்டாலினும், சிவகுமாருக்கு வாழ்த்து சொல்வாரோ?
 2. அவினாசி
  அவிநாசி பகுதியில் ரூ.7.81 கோடியில் திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு
 3. காஞ்சிபுரம்
  சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள்
 4. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை
 5. தமிழ்நாடு
  இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால...
 6. திருப்பூர் மாநகர்
  விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி
 7. தூத்துக்குடி
  புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள்; கருத்தரங்கில் அதிர்ச்சி...
 8. நாமக்கல்
  உயிருடன் உள்ள தாய்க்கு சிலை வைத்து வழிபடும் மகன்: கூலிப்பட்டி கிராம...
 9. தமிழ்நாடு
  நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை இன்று முதல் அமல்
 10. சினிமா
  Sundari நீ ஏன் சுந்தரியைக் கட்டிக்க கூடாது? அனு கொடுத்த அதிர்ச்சி!