/* */

செங்கம் ஒன்றியத்தில் திட்ட பணிகள் ஆய்வு

செங்கம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

செங்கம் ஒன்றியத்தில் திட்ட பணிகள் ஆய்வு
X

செங்கம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு

செங்கம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் லட்சுமி நரசிம்மன் ஆய்வு செய்தார்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரிய கோலா பாடி, கரியமங்கலம், பரமனந்தல் ஆகிய கிராம ஊராட்சிகளில் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டு வீடுகள் தரமாக அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்படுகிறதா என ஊராட்சிகளின் உதவி இயக்குனர் லட்சுமி நரசிம்மன் நேற்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அப்பகுதியில் ஊரக வேலை திட்டத்தில் நடைபெற்று வரும் தார் சாலை, சிமென்ட் சாலை, கால்வாய் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் செயல்பட்டு வரும் சமுதாய கழிப்பறை கட்டடம் , போன்ற பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பரமனந்தல் அரசுப்பள்ளியில் நடைபெற்று வரும் மழைநீர் சேகரிப்பு திட்ட பணிகளை பார்வையிட்டு தரமாக மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.

ஊரக வேலைத் திட்ட பணியாளர்களுக்கு பணி மேற்கொள்ளும் இடத்தில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்து தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

செங்கம் ஒன்றிய அலுவலகத்தில் கிராம ஊராட்சி செயலாளர் களுக்கான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு ஊராட்சி நிர்வாக செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் ரபியுல்லா, பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated On: 30 Jan 2022 3:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  2. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  6. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  7. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  8. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  9. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  10. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...