/* */

ஆரணியில் நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவி

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு அமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

HIGHLIGHTS

ஆரணியில் நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு  நலத்திட்ட உதவி
X

நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்  நலத்திட்ட உதவிகள்  வழங்கினார்.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்று திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கைத்தறி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வி.எச்.09, அத்திமலைப்பட்டு அறிஞர் அண்ணா பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தினை பார்வையிட்டு. அதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு. கைத்தறி ஆதரவுத் திட்டத்தின் கீழ் ரூ.41:18 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்/

இவ்விழாவில் தொழில்நுட்ப மேம்பாடு இனத்தின் கீழ் ஐக்கார்டு இயக்கும் இயந்திரம் நெசவாளர்களுக்கும். 240 ஊக்குகள் கொண்ட ஐக்கார்டு பெட்டி 40, 90 நெசவாளர்களுக்கும். தார் சுற்றும் இயந்திரம், 492 நெசவாளர்களுக்கும். ஜரிகை சுற்றும் இயந்திரம், 20 நெசவாளர்களுக்கும் மொத்தம் 642 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும்.

10 நெசவாளர்களுக்கு கைத்தறி நெசவாளர் முத்ரா கடன் திட்டத்தின்கீழ் ரூ.5. இலட்சம் கடன் உதவியும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரால் வழங்கப்பட்டது.

இவ்விழாவில், சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர்எம்.எஸ்.தரணிவேந்தன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சிவானந்தம், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி

ஆரணி நகரமன்ற தலைவர் மணி ஒன்றிய செயலாளர்கள், மற்றும் கூட்டுறவாளர்கள், நெசவாளர் பெருமக்கள். உள்ளாட்சி பிரதிநிதிகள், நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர்கள். நிர்வாகக்குழு உறுப்பினர்கள், திருவண்ணாமலை சரக, கைத்தறி துறை உதவி இயக்குநர். துறை அலுவலர்கள். மற்றும் நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 25 March 2022 2:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  4. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  8. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  10. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...