/* */

ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு

Revenue Commissioners -ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர்  முருகேஷ் ஆய்வு
X

ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார்.

Revenue Commissioners -திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார்.அப்போது அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டார். அதைத் தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த 5 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு அரசு வழங்கும் நிவாரண தொகை தலா ரூ.1 லட்சம் வழங்கினார்.

ஆரணி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 18 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.இப்பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ், நேரில் பார்த்துவிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் கலெக்டர் முருகேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் மூலம் விவசாயிகளால் பதிவு செய்யப்பட்டு, பின்னர் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு 18 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மூலம் வழங்கப்பட்ட சாப்ட்வேர் மூலம் விவசாயிகள் பதிவு செய்து வருகின்றனர். தற்போது புகார்கள் எதுவும் இல்லை. மத்திய அரசு திட்டம் மூலம் மத்திய அரசே நெல் கொள்முதல் செய்து, அதனை அரிசியாக திருப்பி நமக்கு வழங்குகின்றனர். எங்கெல்லாம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தேவையோ, அங்கெல்லாம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும்.

மாவட்டத்தில் நெல் சாகுபடி ஒவ்வொரு பருவத்துக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. தற்போது மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைவு. கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க திட்டம் மூலம் 172 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, 16 துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து பண்ணை குட்டை, வேளாண் உபகரணங்கள், விதைகள் உள்ளிட்டவைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. விவசாயிகள் நெல் பயிரை மட்டும் சாகுபடி செய்யாமல் மணிலா மற்றும் சிறுதானியங்கள், காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் உள்ளிட்ட பயிர் சாகுபடி செய்து பயன்பெற வேண்டும். என தெரிவித்தார்.

மேலும் திண்டிவனம்-நகரி புதிய இரயில் பாதை அமைக்கும் திட்டம் 2, 3 மாவட்டங்களை சேர்ந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் அடுத்த மாதம் இறுதிக்குள் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்துவிடும். அதைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் நில ஆர்ஜிதம் செய்யும் பணி முடிந்தவுடன் புதிய இரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறும் என்றார்.

ஆரணியில் தொடர்ந்து சைவ அசைவ ஓட்டல்களில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த ஆய்வு அறிக்கை வந்தவுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போது தற்காலிகமாக ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஆரணி சேவூரில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறும்போது பாதிக்கப்பட்ட மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். ஆசிரியர்கள் மாணவனையும், பெற்றோரையும் அழைத்து அறிவுரை வழங்கி இருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து புகார் வந்தது. அதன் காரணமாக துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். போராட்டம் நடத்தும் அளவிற்கு அவர்களை தூண்டிவிடக்கூடாது என பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி, தாசில்தார்கள், ஊரக வளர்ச்சித்துறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலர்கள் பலரும் உடனிருந்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 29 Sep 2022 4:16 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திருவண்ணாமலை To சென்னை கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே!
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2...
  3. ஈரோடு
    ஈரோட்டில் மோடியின் பேச்சை கண்டித்து மகிளா காங்கிரசார் தாலி ஏந்தி...
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  10. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?