/* */

திருவள்ளூர் பா.ஜ.க. வேட்பாளர் பொன் பால கணபதி வேட்பு மனு தாக்கல்

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன் பால கணபதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபு சங்கரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

HIGHLIGHTS

திருவள்ளூர் பா.ஜ.க. வேட்பாளர் பொன் பால கணபதி வேட்பு மனு தாக்கல்
X

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன் பாலகணபதி மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர், பொன்பாலகணபதி இன்று தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியபோது வேட்பாளர் பொன் பால கணபதி கூறியதாவது:-

இதுவரை இருந்த திமுக மற்றும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் திருவள்ளூர் தொகுதிக்கு எந்த முன்னேற்றத்திற்கும் பாடுபடவில்லை என மக்கள் அறிந்து கொண்டதாகவும் திருவள்ளூர் தொகுதி மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்ப்பார்த்து கொண்டு கொண்டிருப்பதாக கூறினார்.

மேலும் திருவள்ளூர் ஒரு சிறந்த தொழில்நகரம் மட்டுமல்ல ஒரு சிறந்த விவசாய மாவட்டமாகவும் விளங்கி வருவதாகவும்,பாஜக ஆட்சியில் அமர்ந்தால் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு சிறந்த முன்னேற்றத்தை ஏற்படுத்துவதும் எனவும் எனவே திருவள்ளூர் தொகுதி மக்கள் மக்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்று முழுமையாக நம்புவதாகவும்,

திருவள்ளூர்-சென்னை மார்க்கமாக ரயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும். திமுக தற்போது பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்ற நினைக்கிறது.இதை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் என் மீது பரப்பப்பட்ட திமுகவின் சதிச்செயல் சித்தரிக்கப்பட்ட வீடியோவாகும் வரப்போகும் இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது நிச்சயமாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

Updated On: 25 March 2024 1:22 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!