/* */

திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தார்.

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
X

திருவள்ளூர் அருகே புல்லட் இருசக்கர வாகனம் மீது அதிவேகமாக வந்த லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவள்ளூர் டோல்கேட் பகுதியைச் சேர்ந்தவர் குப்புராஜ். இவர் தனது நண்பர் முகமது அன்சாரி என்பவருடன் பொன்னேரியில் நடைபெற்ற திருமணத்திற்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். ஈக்காடு விசுவாசபுரம் பகுதி அருகே திருவள்ளூர்-செங்குன்றம் சாலையில் இருந்த வளைவில் திரும்பியபோது பின்னால் வந்து கொண்டிருந்த லாரி குப்புராஜ் சென்ற புல்லட் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் பின்னால் அமர்ந்திருந்த முகமது அன்சாரி மீது லாரி ஏரி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே முகமது அன்சாரி பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிரிழந்தார்.

பலத்த காயம் அடைந்த குப்புராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் லாரியை சாலையின் நடுவே நிறுத்திவிட்டு தப்பிய நிலையில் புள்ளரம்பாக்கம் காவல் நிலைய போலீசார் முகமது அன்சாரியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அதிவேகமாக வந்த லாரி முன்னாள் சென்ற புல்லட் இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதியதனாலேயே இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் அதிவேகமாக லாரியை இயக்கிய ஓட்டுநரை உடனடியாக கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 25 April 2024 10:19 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு