/* */

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கோலப் போட்டி, விழிப்புணர்வு பேரணி

100%வாக்குப்பதிவை வலியுறுத்தி கோலப்போட்டி கையெழுத்து இயக்கம் மற்றும் பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பார்வையிட்டு துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கோலப் போட்டி, விழிப்புணர்வு பேரணி
X

விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்த ஆட்சியர்

திருவள்ளுர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மகளிர் சுய உதவிக் குழுக்கள் சார்பில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த கோலப் போட்டியினை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான டாக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டு தேர்தல் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.


இந்த பேரணியானது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் மக்களவைப் பொதுத் தேர்தல்-2024 முன்னிட்டு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவி குழுக்கள் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் இருந்து திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக காமராஜர் சிலை வரை சென்று முடிவடைந்தது.

50க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்ட இந்த விழிப்புணர்வு பேரணியில் பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களிப்போம், எனது வாக்கு எனது எதிர்காலம், வாக்களிப்பதில் பெருமை கொள்வோம், இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம், எனது வாக்கு எனது உரிமை, தவறாமல் வாக்களிப்பது வாக்காளர் கடமை, நமது இலக்கு 100 % சதவீதம் வாக்குப்பதிவு , தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா, ஓட்டுக்கு வாங்க மாட்டோம் நோட்டு என்ற பதாகைகளை ஏந்தி பொது மக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக சென்றனர்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இராஜ்குமார், கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி மரு. சுகபுத்ரா, மகளிர் திட்ட இயக்குனர் திருமதி. செல்வராணி, உதவி திட்ட அலுவலர் திருமதி. கிறிஸ்டி, மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 March 2024 4:30 AM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்