/* */

சாலையோர வியாபாரிகளுக்கு விலையில்லா தள்ளுவண்டி : எம்.எல்.ஏ வழங்கினார்

திருவள்ளூரில் சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் வி. ஜி.ராஜேந்திரன் வழங்கினார்.

HIGHLIGHTS

சாலையோர வியாபாரிகளுக்கு விலையில்லா தள்ளுவண்டி : எம்.எல்.ஏ வழங்கினார்
X

சாலை ஓர வியாபாரிகளுக்கு விலையில்லா தள்ளு வண்டிகளை வழங்குவதற்காக அவைகளை ரிப்பன் வெட்டி துவக்கி வைக்கும் எம்.எல்.ஏ .வீ,ஜீ.ராஜேந்திரன் 

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு விலையில்லா தள்ளு வண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகராட்சியில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் மூலம் சாலையோர சிறுகடை வியாபாரிகளுக்கு விலையில்லா நவீன தள்ளுவண்டிகள் வழங்கும் விழா நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தலைமையில் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வீ.ஜி.ராஜேந்திரன் கலந்து கொண்டு நகர் பகுதியில் உள்ள சாலையோர ஏழை, எளிய சிறு வியாபாரிகள் பலன் பெறும் வகையில் ரூ.45, லட்சம் மதிப்பீட்டில் 30 வியாபாரிகளுக்கு நவீன தள்ளுவண்டிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் உதயமலர் பொன்.பாண்டியன், நகர்மன்ற துணை தலைவர் ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் சுரேந்தர், பொறியாளர் சுதாகர், பொதுப்பணி மேற்பார்வையாளர் சீனிவாசன், நகர அமைப்பு ஆய்வாளர் குணசேகரன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், ஆய்வாளர் சுதர்சன், நகராட்சி மேலாளர் சந்திரிகா, மகளிர் சுய உதவி குழு தலைவர் சாந்தி, நகராட்சி தூய்மை இந்தியா மேற்பார்வையாளர் பெரியபாளையம் ரவி, நகர்மன்ற கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் நகர்ப்புற வியாபாரிகள் என பலர் கலந்து கொண்டனர்..

திருவள்ளூர் நகராட்சியில் சிறு வியாபாரிகள் தெருவோரங்களில் தரையில் கடைகளைப்போட்டு வியாபாரம் செய்து வந்தனர். அது போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் பெரிதும் இடையூறாக இருந்ததால், நகராட்சி நிர்வாகம் அவர்களின் வாழ்வாதாரம் கெடாமல் அவர்களை பாதுகாக்கும் பொருட்டு அவர்களுக்கு தள்ளுவண்டிகள் வழங்க முடிவு செய்தது. அதன்படி சாலை ஓரங்களில் பாதுகாப்பாக வியாபாரத்தை தொடர்வதற்கு வழிவகை கிடைக்க விலையில்லா தள்ளு வண்டிகளை வழங்கியுள்ளது. இந்த தள்ளு வண்டிகள் கிடைத்துள்ளதால், சிறு வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளதால் அவர்கள் நகராட்சி நிர்வாகத்துக்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

Updated On: 6 July 2023 4:30 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  4. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  5. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  6. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  8. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  9. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  10. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...