/* */

வாக்கு எண்ணும் மையத்தில் wi-fi கருவி கொண்டு வந்ததால் பரபரப்பு

வாக்கு எண்ணும் மையத்தில் wi-fi கருவி கொண்டு வந்ததால் பரபரப்பு
X

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் wi-fi கருவி கொண்டு வந்ததால் பரபரப்பு.

மாவட்ட தேர்தல் அதிகாரி தரப்பில் கம்பிவட இணைப்பு கேட்டு இருந்ததாகவும் சென்னையிலிருந்து இந்த wi-fi கருவி அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதை அதிகாரிகள் திருப்பி அனுப்பி வைத்ததாக தகவல்.

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற மே மாதம் இரண்டாம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட உள்ளது.

இதனிடையில் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை தெரிவிப்பதற்காக இணைய சேவைக்காக கேபிள் மூலம் இணைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் கேபிள் இணைப்பை தருவதற்கு பதிலாக இன்று wi-fi கருவி கொண்டு வந்ததால், தேர்தல் பணியில் இருந்த அதிகாரிகள் அந்த wi-fi கருவியை திருப்பி அனுப்பி இருந்தனர். அப்போது அங்கிருந்த திமுக வேட்பாளர்களின் முகவர்கள் wi-fi கருவி எதற்காக கொண்டு வந்தீர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வாக்கு எண்ணிக்கை தினத்தன்று தேர்தல் ஆணையத்திற்கும், பத்திரிகையாளர்களுக்கும் விரைந்து முடிவுகளை அறிவிக்க ஏதுவாக கேபிள் மூலம் இணைய சேவை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்ட நிலையில் wi-fi கருவியை மாற்றி அனுப்பி வைத்ததால் தேர்தல் பணியில் இருந்த அதிகாரிகள் அதனை திருப்பி அனுப்பியதாகவும் கேபிள் இணைப்பு தான் வேண்டும் என மீண்டும் கடிதம் கொடுத்திருப்பதாகவும் தேர்தல் பணியில் இருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 28 April 2021 5:50 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  2. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  3. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  4. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  7. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  8. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  9. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  10. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை