/* */

ஒன்றிய குழு பெருந்தலைவர் வாகனத்தில் பணம், கட்சி சின்னம் பொறித்த கவர்கள் பறிமுதல்

பொன்னேரியில் ஒன்றிய குழு பெருந்தலைவர் வாகனத்தில் இருந்து 50000ரூபாய், கட்சி சின்னம் பொறித்த கவர்கள் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

ஒன்றிய குழு பெருந்தலைவர் வாகனத்தில் பணம், கட்சி சின்னம் பொறித்த கவர்கள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட கவர்கள்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நிலையான கண்காணிப்பு குழுவினர் பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த திமுக ஒன்றிய குழு பெருந்தலைவர் ரவியின் வாகனத்தை மடக்கி சோதனை மேற்கொண்டனர். அதில் 50000ரூபாய் பணமும், கட்சி தலைவர்கள், சின்னம் பொறித்த பரிசு கவர்களும் இருந்தன.

இதனையடுத்து பணத்தையும், பரிசு கவர்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்போது 50000ரூபாய்க்கு அதிகமாக வைத்திருந்தால் தானே பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

கட்சி சின்னம் பொறித்த பரிசு கவர் உள்ளதால் பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என கூறிய போது வழக்கமாக திருமணம், பிறந்தநாள், காதணி விழா என சுப நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது மொய் கொடுப்பதற்காக வைத்திருக்கும் கவர் என கூறியுள்ளனர். எனினும் பணமும், கட்சி சின்னம் பொறித்த பரிசு கவரும் காரில் இருந்ததால் அதனை பறிமுதல் செய்வதாக கூறி பொன்னேரி உதவி தேர்தல் அலுவலரிடம் அதிகாரிகள் பணத்தை ஒப்படைத்தனர்.

தொடர்ந்து பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. திமுக ஒன்றிய குழு பெருந்தலைவர் காரில் இருந்து 50000ரூபாயையும், பரிசு கவரும் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 26 March 2024 8:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  3. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  4. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  5. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  6. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  7. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  8. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  9. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!