/* */

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பட்டியலின மக்கள் போராட்டம்

ஊத்துக்கோட்டை அருகே இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பட்டியலின மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

HIGHLIGHTS

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பட்டியலின மக்கள் போராட்டம்
X

ஊத்துக்கோட்டை அருகே இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பட்டியலின மக்கள் போராட்டம் நடத்தினர்.

ஊத்துக்கோட்டை அருகே லச்சிவாக்கம் ஊராட்சியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே லச்சிவாக்கம் ஊராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக இந்த பகுதியில் குடியிருந்து வரும் இவர்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை கேட்டு அதிகாரிகளுக்கு மனு அனுப்பினார்கள். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். இது தவிர அவ்வப்போது நடத்தப்படும் சிறப்பு முகாம்களிலும்மனுக்கள் அனுப்பினர். ஆனாலும் பலன் இல்லை.

மேலு்ம இப்பகுதியில் உள்ள தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்டு தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர்,சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை மனு அளித்தும் இது பலனில்லை என்றும் குற்றம் சாட்டினர். மேலும் தாங்கள் பல வருடங்களாக தொடர்ந்து ஆர்ப்பாட்டத்திலும் போராட்டத்திலும் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர். இதற்காக தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தங்களுக்கு 3 சென்ட இலவச வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல் அனைத்து குடும்பத்தினரும் தங்களிடம் உள்ள குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியரிம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்துவோம். இந்த போராட்டம் இரவு பகல் என பாராமல் தொடர் போராட்டமாக நடைபெறும் என்றும் கூறினார்கள்.

Updated On: 22 Nov 2022 6:18 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  6. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  9. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  10. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...