/* */

திருவள்ளூர் அருகே வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

திருவள்ளூர் அருகே வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே  வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
X

வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மக்கள்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் சூளைமேனி காலனி பகுதியில் 120-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள மக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சுமார் 150 பேர் பணி செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக 100 நாள் வேலை வழங்குவதில்லை என்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை வைத்தும் ஊராட்சி நிர்வாகத்தில் முறையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்கப் படவில்லை என கூறப்படுகிறது. நேற்று கிராம மக்கள் ஒன்று கூடி எல்லாபுரம் வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சிகள் ஸ்டாலினிடம் தெரிவிக்க வந்தபோது சரியான பதில் அளிக்கவில்லை என்று ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று கூடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 13 Sep 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!