/* */

பெரியபாளையத்தில் 6 வழிச்சாலை குறித்து விவசாயிகள் சங்கம் ஆலோசனை

பெரியபாளையத்தில் 6 வழிச்சாலை குறித்து விவசாயிகள் சங்கம் ஆலோசனை கூட்டம்.

HIGHLIGHTS

பெரியபாளையத்தில்  6 வழிச்சாலை குறித்து விவசாயிகள் சங்கம் ஆலோசனை
X

திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் - முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 128 கி.மீ.தூரத்திற்கு ₹ 3200 கோடி செலவில் 6 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்க தமிழக அரசும், ஆந்திர அரசும் இணைந்து தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற முடிவு செய்துள்ளது. இதற்காக ஊத்துக்கோட்டை வட்டத்தில் மட்டும் 6 வழிச்சாலைக்காக 18 கிராமங்கள் பாதிக்கப்படுகிறது. பள்ளிப்பட்டு மற்றும் பொன்னேரி வட்டத்தில் தலா 6 கிராமங்களும் பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் ஊத்துக்கோட்டை பகுதி நஞ்சை நில விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது . இதில் மாநில விவசாய சங்க தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார்.

திருவள்ளூர் மாவட்ட தலைவர் சம்பத், ஊத்துக்கோட்டை நஞ்சை நல விவசாய நிர்வாகிகள் குணசேகரன், சசிகுமார், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் கூறும்போது, 714 தேசிய நெடுஞ்சாலைக்காக தமிழக அரசு நஞ்சை நிலத்தை 6 வழிச்சாலைக்காக எடுக்கிறார்கள் அவ்வாறு நிலத்தை எடுக்காமல் ஏற்கனவே உள்ள சாலையை அகலப்படுத்த வேண்டும் அல்லது மாற்றுவழியை நடைமுறைப்படுத்த வேண்டும் இது குறித்து வருகின்ற 23 தேதி மாவட்ட தவைநகரான திருவள்ளூரில் கோரிக்கை மாநாடு நடத்த உள்ளோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Updated On: 9 April 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  5. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  9. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  10. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...