/* */

ஆவடியில் குடிபோதையில் காரை வழிமறித்து குத்தாட்டம் போட்ட மதுப்பிரியர்!

ஆவடியில் மதுக்கடை திறந்த மகிழ்ச்சியில் மது குடித்து விட்டு காரை வழிமறித்து நடுரோட்டில் மதுப்பிரியர் குத்தாட்டாம் போட்டார்.

HIGHLIGHTS

ஆவடியில் குடிபோதையில் காரை வழிமறித்து குத்தாட்டம் போட்ட மதுப்பிரியர்!
X

காரை வழிமறித்து குத்தாட்டம் போட்ட மதுப்பிரியர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு போடப்பட்டது.தற்போது கொரோனா தொற்று குறைந்துவரும் நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு வருகிறது. ஊரடங்கு தளர்வில் டாஸ்மாக் கடைகளும் திறக்கலாம் என்ற அறிவிப்பு மதுப்பிரியர்களிடம் சந்தோசத்தை ஏற்படத்தியது.

ஆவடி மாநகராட்சி அலுவலகத்தின் முன்புறத்தில் இன்று காலையில் குடிமகன் ஒருவர் மதுபோதையில் தள்ளாடியபடியே நின்று கொண்டிருந்தார். அவர் திடீரென சாலையின் நடுவே வந்து குத்தாட்டம் போட தொடங்கினார். ஆவடி நெடுச்சாலையை பொறுத்த வரை எப்போதுமே வாகனங்கள் போக்குவரத்துடன் பரபரப்பாகவே காணப்படும் பகுதி. குடிமகனின் இந்த திடீர் குத்தாட்டத்தால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை மெதுவாகவே ஓட்டிச்சென்றனர். ஒருகட்டத்தில் அந்த நபர் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்றை நிறுத்தி குத்தாட்டம் போட்டார்.

அந்த கார் ஓட்டுனரும் குடிமகனின் ஆட்டத்தை வேடிக்கை பார்த்துவிட்டு பொறுமையாக காரை எடுத்து சென்றார். இப்படியே சிறிது நேரம் சாலையின் குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதும், தன்னிடம் இருந்த கூலிங்கிளாஸை எடுத்து அவ்வப்போது கண்ணில் மாட்டிக்கொண்டவாறு சந்தோச நடனம் போடுவதை வாகன ஓட்டிகளும், அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தவர்களும் பரிதாபமாக பார்த்து சென்றனர். டாஸ்மாக் கடை திறந்தாலே இது தான் நிலை என்று வருத்தத்துடன் சிலர் முணுமுணுத்தப்படியே சென்றனர்.

Updated On: 14 Jun 2021 2:52 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  4. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  5. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  6. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  7. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  8. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  9. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
  10. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்