/* */

திருச்சியில் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை அமைச்சர் கே.என். நேரு தொடங்கிவைத்தார்

திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் 535 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்யும் பணியை அமைச்சர் கே.என்,.நேரு தொடங்கிவைத்தார். .

HIGHLIGHTS

திருச்சியில் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை அமைச்சர் கே.என். நேரு தொடங்கிவைத்தார்
X

திருச்சி மாநகராட்சியில் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனையை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார். அருகில் கலெக்டர் சிவராசு, எம்எல்ஏக்கள்

தமிழக அரசு இன்று முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தியது, இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் வேண்டிய காய்கறிகளை நடமாடும் வாகனம் மூலம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி இன்று காலை திருச்சி மாநகராட்சி உள்ள 65 வார்டுகளிலும் அத்தியாவசிய காய்கறிகள் மற்றும் பழங்கள் வானங்கள் விற்பனையை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்.

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் 535 வாகனங்களும், புறநகர் பகுதிகளுக்கு 500 வாகனங்களும் இயக்கப்பட உள்ளது மேலும் வார்டு ஒன்றுக்கு ஐந்து வாகனம் என்ற எண்ணிக்கையில் விற்பனை நடைபெறுகிறது. இதனை தொடங்கி வைத்த

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில் திருச்சி அரசு மருத்துவமனை 1200 படுக்கை வசதிகளும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் 300 படுக்கை வசதிகளும் காஜமலை பகுதியில் 200 சித்தமருத்துவ படுக்கை வசதிகளுடன் சிகிச்சை அளிக்க ஏற்படுத்த செய்யப்பட்டுள்ளது.

தற்போது லால்குடி, தொட்டியம் பகுதியில் கொரோனா தடுப்பு சிகிச்சை மையங்கள் திறந்துவைக்கப்படவுள்ளது விரைவில் அங்கு ஆக்சிஜன் கூடிய வசதி ஏற்படுத்தப்படும்

கோவிட் தொற்றை முழுவதுமாக ஒழிக்க வேண்டுமென்றால் பொதுமக்களுடைய ஒத்துழைப்பு மிக அவசியம். பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வரக் கூடாது .அப்படி வாகனங்களில் வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு,மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், மத்திய மாவட்ட பெறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன்,சட்டமன்ற உறுப்பினர்கள் லால்குடி சௌந்தரபாண்டியன்,துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார்,ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி பழனியாண்டி,தலைமை பொறியாளர் அமுதவல்லி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 May 2021 5:57 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்