/* */

காவிரி ஆற்றில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

காவிரி ஆற்றில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

HIGHLIGHTS

காவிரி ஆற்றில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்க  பொதுமக்கள் எதிர்ப்பு
X

போராட்டம் நடத்திய விவசாயிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

திருச்சி மாவட்டம், பேட்டவாய்த்தலை முதல் கம்பரசம்பேட்டை பகுதி வரை உள்ள காவிரி ஆற்றில் இருந்து மணிகண்டம், ராமநாதபுரம், பிராட்டியூர், திருச்சி மாநகராட்சி, மணப்பாறை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டங்கள் ஆழ்குழாய் அமைத்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆழ்குழாய் கிணறுகளின் மூலம் தென்மாவட்டம் மட்டுமல்லாது ஏனைய திட்டங்கள் மூலம் நாள்தோறும் பல கோடி லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. இதனால் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக காவிரி கரையோரம் இருந்த ஏராளமான தென்னை மரங்கள் மட்டுமல்லாது ஊராட்சியில் பொதுமக்களுக்கு குடிதண்ணீர் வழங்க போடப்பட்டிருந்த ஆழ்குழாய் கிணற்றில் கூட தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுமிகுந்த சிரமபட்டனர்.

இந்த நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண குடிலின் பின்பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் திருச்சி ரயில்வே நிலையத்திற்கும், பொன்மலை குடியிருப்பு பகுதிக்கும் ஆழ்குழாய் அமைத்து குடிதண்ணீர் எடுப்பதற்காக பரிசோதனை செய்ய வந்தவர்களுக்கு அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இத்திட்டம் செயல்படுத்த வில்லை. இதனை தொடர்ந்து பல்வேறு நிலைகளில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சு வார்தையிலும் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே நடைமுறை படுத்த வில்லை.

இந்த நிலையில் மீண்டும் நேற்று காலை அந்த பகுதியில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவு படி மண் பரிசோதனை செய்ய அதிகாரிகள் வருவதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவாயிகள் இன்று ஒன்று திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அப்போது விவசாயிகள் சார்பில் கேட்ட கேள்விகளுக்கு பதில் ஏதும் கூறாமல் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்படி வந்திக்கிறோம். அதனால் எங்கள் பணியை செய்ய விடுஙகள் என்று அதிகாரிகள் தெரிவிக்க பொது மக்கள் ஆவேசமடைந்து 4 வருடங்களில் ஏற்பட்ட அமைதி பேச்சுவார்த்தையின்படி எதுவும் நடைபெறவில்லை. ஆனால் இன்று மட்டும் இங்கு வந்து ஆழ்குழாய் அமைக்க வந்திருக்கின்றீர்கள் என்று அதிகாரிகளிடம் கேட்டனர்.

பின்னர் பொதுமக்களிடம் ஸ்ரீரங்கம் தாசில்தார் குணசேகரன், கூடுதல் போலீஸ்துணை சூப்பிரண்டு குத்தாலிங்கம், ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படாமல் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் பொது மககளின் எதிர்ப்பை மீறி அதிகாரிகள் பரிசோதனை செய்ய வந்த வண்டிகளை பேட்டவாய்த்தலை பகுதியில் உள்ள ஒரு பாதை வழியாக காவிரி ஆற்றுக்குள் சென்று பரிசோதனை செய்ய தொடங்கினர்.

இது பற்றி பொது மக்கள கூறுகையில், காவிரி ஆற்றில் உள்ள பல கூட்டுகுடிநீர் திட்டத்தினால் பல லட்சம் கோடி தண்ணீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. இதனால் எங்கள் ஊராட்சியில் உள்ள 9 வார்டுகளில் 4 வார்டுக்கு மட்டும் தான் காவிரி குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற பகுதிக்கு ஊராட்சி ஆழ்குழாய் தண்ணீர் மூலம் குடிதண்ணீர் வழங்கப்பட்டு விருகிறது. பொதுமக்களின் எதிர்ப்பை மீறி அதிகாரிகள் தங்களுடைய அதிகாரத்தினால் காவிரி ஆற்றில் பரிசோதனை செய்வது பொது மக்களையும், விவசாயிகளையும் வஞ்சிப்பது போல் உள்ளது. இந்த பகுதியில் உள்ள விவசாயிகளையும், பொதுமக்களையும் பாதிப்படைய செய்து விட்டு மற்ற பகுதி மக்களுக்கு இந்த பகுதியில் ஆழ்குழாய் அமைத்து குடிதண்ணீர் எடுப்பது முறையற்றதாக உள்ளது.

இதற்கு பதிலாக இந்த இடத்தை விட்டு, விட்டு வேறு பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்க அதிகாரிகள் முயற்சி செய்யலாம். மேலும் இந்த பகுதியில் உள்ள அனைத்து கிராம ஊராட்சியிலும் சிறப்பு கிராம சபை கூட்டம், மற்றும் பேரூராட்சியில் அவசர கூட்டமும் போட்டு காவிரி ஆற்றில் ஆழ்குழாய் அமைப்பதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாவட்ட கலெக்டரிடம் கொடுக்கப்படும். தீர்மானத்திற்கு எதி்ராக குறிப்பிட்ட பகுதியில் ஆழ்குழாய் அமைக்க நேரிட்டால் மக்களை திரட்டி மக்கள் போராட்டமாக நடத்துவோம் என்று தெரிவித்தனர்.

Updated On: 30 March 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு