/* */

ஓ.பி.எஸ். கருணாநிதியின் பக்தன்- திருச்சி மாவட்ட செயலாளர் குற்றச்சாட்டு

ஓ.பி.எஸ். கருணாநிதியின் பக்தனாக இருப்பதால் மென்மையான போக்கை கடைபிடித்தார் என திருச்சி மாவட்ட செயலாளர் குற்றச்சாட்டினார்.

HIGHLIGHTS

ஓ.பி.எஸ். கருணாநிதியின் பக்தன்- திருச்சி மாவட்ட செயலாளர் குற்றச்சாட்டு
X

செய்தியாளர்களை சந்தித்தார் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப.குமார்.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் முன்னாள் எம்.பி.ப. குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் எனக்கு பின்னரும் ஆயிரம் ஆண்டுகள் இந்த இயக்கம் இருக்கும் என மறைந்த எம்.ஜி.ஆர். கூறினார். ஜெயலலிதா எனக்கு பின்னாலும் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அந்த இயக்கம் ஆட்சியில் இருக்கும் என்றார். அத்தகைய வலிமையான தலைவர்களின் வரிசையில் இப்போது இருப்பவர் தான் எடப்பாடி பழனிசாமி . நான்கரை ஆண்டுகாலம் ஆட்சியை செம்மையாக நடத்தி சென்ற அவர் கட்சியையும் திறம்பட நடத்தி வருகிறார். ஆனால் ஓ.பி.எஸ். அப்படியல்ல அவர் தான் சார்ந்த சாதிக்கு கூட எதுவும் செய்யவில்லை. சாதியை நம்பி அரசியல் செய்கிறார். அதுமட்டுமில்ல சட்டசபையில் நான் கருணாநிதியின் பக்தர் பராசக்தி பார்த்தேன் என்றெல்லாம் கூறி மென்மையான போக்கை கடைபிடித்தார். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தி.மு.க. தீயசக்தி என எத்தனையௌ முறை கூறி இருக்கிறார்கள். அந்த தீய சக்திகளுடன் இவருக்கு உறவு என்றால் தொண்டர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்றார்.

Updated On: 27 Jun 2022 6:39 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்