/* */

திருச்சி கல்லூரியில் மாற்றம் அமைப்பு சார்பில் நுகர்வோர் கருத்தரங்கு

திருச்சி கல்லூரியில் மாற்றம் அமைப்பு சார்பில் நுகர்வோர் உரிமை பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சி கல்லூரியில் மாற்றம் அமைப்பு சார்பில் நுகர்வோர்  கருத்தரங்கு
X
திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் நுகர்வோர் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

அகில இந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மாற்றம் அமைப்பு சார்பில் திருச்சி ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரியில் பயிலும் 3ம் ஆண்டு பி. பி. ஏ. மாணவிகளுக்கு நுகர்வோர் உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து கருத்தரங்கம் மற்றும் மாணவிகளுக்கு நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு துண்டறிகை வழங்கும் நிகழ்வு கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாற்றம் அமைப்பின் நிறுவனரும் அகில இந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் கலந்து கொண்டு மாணவிகள் மத்தியில் நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார்.


இந்நிகழ்வில் கல்லூரியின் வணிக ஆட்சியியல் துறைத்தலைவர் முனைவர். சுரேகா பெலிக்ஸ் மற்றும் வணிக ஆட்சியியல் துறை துணைப்பேராசிரியர் முனைவர் நஜ்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வின்போது மாணவிகளுக்கு புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமியால் வெளியிடப்பட்ட இயற்கை உரம் குறித்து எடுக்கப்பட்ட மண் குறும்படம் திரையிடப்பட்டு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டறிகை வழங்கப்பட்டது. நிகழ்வில் பேராசியர்கள், திரளான மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 April 2022 1:44 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  8. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  9. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  10. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...