/* */

அரவை கொப்பரை தேங்காய்: விவசாயிகளுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் குறித்து விவசாயிகளுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

அரவை கொப்பரை தேங்காய்: விவசாயிகளுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
X

கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடர்பாக விவசாயிகளுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வேளாண் உற்பத்தியினை பெருக்கி, விவசாயப் பெருமக்களின் வருமானத்தினை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2021-ம் ஆண்டில் விவசாயிகள் உற்பத்தி செய்த கொப்பரைகளை மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அரவைக் கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிலோ ஒன்றிற்கு ரூ.108.60 வீதமும், பந்து கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிலோ ஒன்றிற்கு ரூ.117.50 வீதமும் கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மூலம் விவசாயிகள் நேரடியாக பயனடைந்ததோடு, கொப்பரையின் சந்தை விலை உயர்ந்ததால், அனைத்து தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் இலாபகரமான விலை கிடைத்தது.


இதேபோல், நடப்பு 2023 ஆம் ஆண்டு மீண்டும் தென்னை விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கத்தில், மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரவைக்கொப்பரை கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின், திருச்சிராப்பள்ளி விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் துவரங்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலமாக அரவைக் கொப்பரை நிர்ணயிக்கப்பட்ட சராசரி தரத்தில் இருக்கும் வண்ணம் நன்கு சுத்தம் செய்து ஈரப்பதம் 6 சதவீதம் இருக்குமாறு, நன்கு உலர வைத்து தரமுள்ள அரவைக் கொப்பரை கிலோ ஒன்றிற்கு ரூ.108.60 வீதம் கொள்முதல் செய்யப்படும். கொப்பரைக்கான கிரயம் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்படும்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஏப்ரல் 2023 மாதம் முதல் செப்டம்பர் 2023 வரை அரவைக்கொப்பரை கொள்முதல் செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் கீழ்காணும் ஆவணங்களுடன் துவரங்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை அணுகி நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களைக் கொண்டு பதிவு செய்து தங்களது கொப்பரையினை விற்பனை செய்து பயனடையலாம். தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல இலாபகரமான விலை கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள இத்திட்டத்தினை தென்னை சாகுபடி செய்யும் அனைத்து விவசாயப் பெருமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு உதயகுமார், மேற்பார்வையாளர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், துவரங்குறிச்சி என்ற முகவரியிலும், தொடர்புக்கு 80120 25720 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் .

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 14 March 2023 1:48 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது