Begin typing your search above and press return to search.
ஸ்ரீரங்கம் தைத்தேர் விழாவில் சேஷ வாகனத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் தைத்தேர் விழாவில் சேஷ வாகனத்தில் நம்பெருமாள் இன்று சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
HIGHLIGHTS

தங்க சேஷ வாகனத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்.
பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் தைத்தேர் திருவிழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பூபதி திருவிழா என அழைக்கப்படும் இந்த விழா 9ந்தேதி கொடியேற்றடத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
விழாவின் தொடர்ச்சியாக உற்சவர் நம்பெருமாள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். தைத்தேர் உற்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று நம்பெருமாள் தங்க சேஷ வாகனத்தில் எழுந்தருளி உள் பிரகாரங்களில் வலம் வந்தார்.அப்போது பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.