/* */

தூத்துக்குடியில் நடைபாதைகளை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள்…

Thoothukudi Municipal Corporation -தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் நடைபாதைகளை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள்…
X

தூத்துக்குடியில் நடைபாதையில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள்.

Thoothukudi Municipal Corporation -தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 1000 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, அண்ணா நகர், பிரையண்ட் நகர் ரோடு, வி.இ.ரோடு, பாலவிநாயகர் கோவில் தெரு, திருச்செந்தூர் ரோடு, தேவர்புரம் ரோடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய ரோடுகள் சிமெண்ட் சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

புதியதாக அமைக்கப்பட்டுள்ள அந்த ரோடுகளின் இருபுறமும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் நடந்து செல்வதற்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த ரோடுகளில் இருச்சக்கர வாகனங்கள், கார்கள் போன்ற வாகனங்களை யாருக்கும் இடையூறு இல்லாமல் நிறுத்துவதற்கு என பிரத்யேகமாக தனி இட வசதியும் செய்து கொடுக்கப்பட்டள்ளது.

ஆனால், புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கான நடைபாதைகளில் இருச்சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி சென்று திரும்பும் மாணவ, மாணவிகள், பெண்கள், வயதானவர்கள் என பொதுமக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, பொதுமக்கள் வாட்ஸ்அப் மூலமாக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு புகாரும் தெரிவித்துள்ளனர். சாலையோரத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது:

தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக தூத்துக்குடி மாநகராட்சியை மாற்றிடும் வகையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இரவு பகலாக பல்வேறு மக்கள் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்தவகையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சீர்மிகு நகர திட்டத்தில் பணிகள் முடிவற்ற ரோடுகளான அண்ணா நகர் மெயின் ரோடு, போல்டன்புரம் ரோடு, தேவர்புரம் ரோடு, வி.இ.ரோடு, மற்றும் பாலவிநாயகர் கோவில் தெரு ரோடு ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதற்கு என்று பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்துமாறு வாகன ஓட்டிகளை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். அதாவது, அந்த ரோடுகளின் இருபுறமும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ள 1.5 மீட்டரானது பள்ளிக் குழந்தைகளும், பொதுமக்களும் நடந்து செல்வதற்கு மட்டுமே உள்ள வழித்தடமாகும்.

மீதமுள்ள இடமானது வாகனம் நிறுத்துவதற்கான பகுதியாகும். எனவே, குழந்தைகள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் நடந்து செல்வதற்கு தடை ஏற்படுத்துவர்கள் மீதும், குறிப்பிட்ட இடங்களில் வாகனங்களை முறைப்படி வரிசையாக நிறுத்தாமல் இடையூறாக நிறுத்தி மற்ற வாகனங்களை நிறுத்த தடைகளை ஏற்படுத்துபவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துபவர்கள் நடந்து செல்பவர்கலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வாகனங்களை நிறுத்துவதே சரியானதாகும். மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தந்திட வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 Nov 2022 10:02 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  2. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  3. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  4. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  5. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  6. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  7. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  8. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  9. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  10. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...