/* */

குரூப்-2 பிரிவில் அரையிறுதிக்கு செல்வது யார்? உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி!

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், குரூப்-2 பிரிவில் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு இந்தியா உள்ளிட்ட 4 அணிகளுக்கு இருப்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

HIGHLIGHTS

குரூப்-2 பிரிவில் அரையிறுதிக்கு செல்வது யார்? உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி!
X

கடந்த 2007 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் டோனி தலைமையிலான இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டித் தொடரில் தகுதிச் சுற்று முடிவில் வெஸ்ட் இன்டீஸ், நமீபியா, யுஏஇ, ஸ்காட்லாந்து ஆகிய நான்கு அணிகள் வெளியேறின. சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மொத்தம் 45 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது.

குரூப்-1 பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளில் 3 வெற்றி, ஒரு தோல்வி மற்றும் முடிவு எட்டப்படாத போட்டி என மொத்தம் 7 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்த நியூஸிலாந்து அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தொடரில் இருந்து வெளியேறி உள்ளன.

அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் மற்றொரு அணி எது என்ற இழுபறி நீடித்த நிலையில், இலங்கை அணியை வீழ்த்தி 7 புள்ளிகளுடன் அதிக ரன்ரேட் அடிப்படையில் இங்கிலாந்து அணி அரையிறுத்திக்கு முன்னேறி உள்ளது. போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

உச்சக்கட்ட எதிர்பார்ப்பு:

இது இப்படி இருக்க குருப்-2 பிரிவில் அரையிறுதிக்கு எந்த இரண்டு அணிகள் தகுதி பெறும் என்ற நிலையை யாரும் கணிக்க முடியாத சூழல் உள்ளது. இதற்கான போட்டிகள் நாளை நடைபெறுகிறது. நாளை நடைபெறும் இந்தியா-ஜிம்பாப்வே, பாகிஸ்தான்- வங்கதேசம், தென் ஆப்ரிக்கா- நெதர்லாந்து போட்டியின் முடிவுகளை தெரிந்து கொள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.

3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று தற்போது முதலிடத்தில் உள்ள இந்திய அணி, ஜிம்பாப்வே அணியை வீழ்த்தினால் 8 புள்ளிகளுடன் எளிதாக அரையிறுத்திக்கு தகுதி பெற்றுவிடும். 5 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ள தென் ஆப்ரிக்கா அணி நெதர்லாந்து அணியை வீழ்த்தினால் 7 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும்.

ஆனால், பாகிஸ்தான்- வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் அந்த அணி 6 புள்ளிகள் பெறும். இதேநேரத்தில் இந்தியா- ஜிம்பாப்வே போட்டியில் இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்து பாகிஸ்தான் வங்கதேசத்தை வீழ்த்தினால் இரு அணிகளும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையை பெறும். இருப்பினும், ரன்ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அணி அரையிறுத்திக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

ஒருவேளை இந்தியா-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும். அப்படியானால் இந்தியா எந்தவித பிரச்சினையும் இல்லாமல் அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.

பாகிஸ்தான்- வங்கதேசம் அணிகளுக்கு எதிரான போட்டியின் முடிவைப் பற்றி இந்தியா கவலைப்பட வேண்டியது இல்லை. ஆனால், பாகிஸ்தான் வங்கதேசத்தை வீழ்த்தியும், தென் ஆப்ரிக்கா அணி நெதர்லாந்திடம் தோற்றால் தென் ஆப்ரிக்கா வெளியேறி பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.

இதைவிட இன்னொரு ஹைலைட் என்வென்றால் வங்கதேசம் அணி பாகிஸ்தானை அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வீழ்த்தினால் 6 புள்ளிகள் பெறும். பாகிஸ்தான் 4 புள்ளிகளோடு வெளியேறி விடும். அதேசமயம், இந்தியா-ஜிம்பாப்வே அணியிடம் மோசமான தோல்வியை தழுவினால் ரன்ரேட் அடிப்படையில் வங்கதேசம் அரையிறுதிக்கு முன்னேறவும் வாய்ப்பு உள்ளது.

குரூப்-2 பிரிவைப் பொறுத்தவரை ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகள் போட்டித் தொடரில் இருந்து வெளியேறுவது உறுதியாகிவிட்டது. மற்ற நான்கு அணிகளுக்குமே அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதால் நாளை நடைபெறும் மூன்று போட்டிகளும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விடுமுறை விருந்தாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

பாகிஸ்தான் நடிகையின் அதிரடி அறிவிப்பு:

இதற்கிடையே, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றால் அந்த நாட்டின் குடிமகனை திருமணம் செய்து கொள்வதாக பாகிஸ்தான் நடிகை ஷெகர் ஷின்வாரி தனது டுவிட்டர் பக்கத்தில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நடிகை ஷென் ஷின்வாரியின் அறிவிப்புக்கு பதில் அளித்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், அப்படியென்றால் கடைசி வரை சிங்கிள்தான் என பதில் அளித்து உள்ளனர்.

Updated On: 5 Nov 2022 11:43 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  2. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  3. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  4. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  5. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  6. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  7. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  8. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்