/* */

தமிழகத்தில் கரும்பூஞ்ஜை தொற்றுக்கு முதல் உயிரிழப்பு..

கொரோனா தொற்றை தொடரும் கருப்பு பூஞ்சை நோய்.

HIGHLIGHTS

தமிழகத்தில் கரும்பூஞ்ஜை தொற்றுக்கு முதல் உயிரிழப்பு..
X

கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு.

தமிழகத்தில் கரும்பூஞ்ஜை தொற்றுக்கு முதல் உயிரிழப்பு

கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் உயிரிழந்தார்.


கருப்பு பூஞ்சை தொற்று யாரை அதிகம் பாதிக்கும்? தற்காத்து கொள்வது எப்படி? மருத்துவ நிபுணர்கள் அளிக்கும் எச்சரிக்கை.

கருப்பு பூஞ்சை தொற்று யாருக்கு, எப்படி ஏற்படுகிறது என்பது குறித்தும், அதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்தும், அதன் சிகிச்சை முறைகள் பற்றியும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை கண் சீரமைப்பு, கண் புற்றுநோய் துறைத் தலைவர் மருத்துவர் உஷா கிம் விரிவாக விளக்கியுள்ளார்.

#கருப்பு பூஞ்சைத் தொற்று (Mucormycosis) என்றால் என்ன?

இந்தக் கருப்பு பூஞ்சைத் தொற்று, அரிதாக ஏற்படக்கூடியது; மிக அதிக பாதிப்பை உண்டாக்கக்கூடியது. நீரிழிவு நோயாளிகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் இந்த பாதிப்பு இருக்கும். இந்தத் தொற்று, தற்போது கொரோனா நோய்த் தொற்று உள்ளவர்களுக்கும் ஏற்படுகிறது.

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் இந்த பாதிப்பு உள்ளவர்கள், வருடத்திற்கு சராசரியாக எத்தனை பேர் வருகிறார்களோ அதே எண்ணிக்கையில் தற்போது ஒரு வாரத்திற்கு வருகிறார்கள்.

உலகின் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது கொரோனா காலத்திற்கு முன்பிலிருந்தே இந்தியாவில் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு நோயாளிகள், சீறுநீரக செயலிழப்பிற்கு உள்ளானவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மற்றும் கீமோதெரபி சிகிச்சை எடுத்துகொள்பவர்களுக்கு கருப்பு பூஞ்சைத் தொற்று (Mucormycosis) பாதிப்பு அதிகமாக உள்ளது.

#அறிகுறிகள் என்ன?:


• கண் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வலி அல்லது சிவந்து காணப்படுதல்

• முகத்தில் வலி

• கண்ணைச் சுற்றியுள்ள பகுதி, நிறம் மாறுதல்

• திடீர் பார்வையிழப்பு

• கண் வீக்கமடைதல்

• கருவிழி துருத்திக் கொண்டிருத்தல்

• கருவிழி அசையாமல் இருத்தல்

• கண் தசைகளுக்கு வலுவளிக்கும் நரம்புகள் செயலிழத்தல்

• காய்ந்த தீப்புண் போன்ற கருப்பு நிற புண்

• மூக்கடைப்பு, மூச்சுத் திணறல், மூக்கில் நீர் அல்லது இரத்தம் வடிதல்

#இந்த நோய் தொற்று யாருக்கு ஏற்படும்?

பொதுவாக, கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு, இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படும். கொரோனாவிலிருந்து மீண்டு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கும் ஏற்படுகிறது.

ஒருவரது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

கொரோனா சிகிச்சைக்காக அளிக்கப்படும் மருந்துகள் கொரோனாவிலிருந்து மீண்டு வர உதவும். இருப்பினும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைக்கக் கூடும். வைரஸானது நோயின் தீவிரத்தாலோ சிகிச்சைக்கு எடுத்துக்கொள்ளும் மருந்தாலோ கணையத்தை பாதிக்கும். இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். கொரோனா நோய் காரணமாகவோ கொரோனா சிகிச்சை காரணமாகவோ இரத்த சர்க்கரை அளவும் அதிகரிக்கக்கூடும். எனவே, கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்போதும் பாதிப்பிலிருந்து மீண்டு வந்த பிறகும் உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிக அவசியம்.

#இதற்கு என்ன சிகிச்சை?:

கருப்பு பூஞ்சைத் தொற்றை (Mucormycosis) ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிறப்பு மருத்துவரை அணுகினால் சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியும். காது, தொண்டை, கழுத்து (ENT) சிறப்பு மருத்துவர், கண் மருத்துவர் மற்றும் நரம்பியல் மருத்துவ நிபுணர்களால் இந்நோயை குணப்படுத்த முடியும். அங்கீகரிக்கப்பட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு சிகிச்சைகள் வழங்கப்படும்.

#தற்காத்து கொள்வது எப்படி?:

• உடலில் இரத்த சர்க்கரை அளவு எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். மருத்துவர் பரிந்துரைத்த உணவுமுறையைப் பின்பற்ற வேண்டும். வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

• இரத்த சர்க்கரை அளவை தினமும் பரிசோதிக்க வேண்டும். இயல்பான அளவில் இருந்தால், கவலை கொள்ள தேவையில்லை. அதிகமாக இருந்தால், மேற்கூறிய அறிகுறிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களது பொது மருத்துவரை அணுகவும்.

• சுய மருத்துவம் எடுத்துக்கொள்ளவே கூடாது.

• மருத்துவர்களின் அறிவுரையின்றி எந்த மருந்தையும் நிறுத்தக் கூடாது.

• சர்க்கரை நோயாளிகள், கொரோனா நோயிலிருந்து தற்காத்து கொள்ள எப்போதும் முகக்கவசம் அணியவும். சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவும். அடிக்கடி கை கழுவவும்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த 57 வயது வெல்டிங் பட்டறை உரிமையாளர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனில்லாமல் இன்று உயிரிழந்துள்ளார்.தமிழகத்தில் கரும்பூஞ்ஜை தொற்றுக்கு முதல் உயிரிழப்பாகும்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு - வெல்டிங் பட்டறை உரிமையாளர் சிகிச்சை பலனில்லாமல் இன்று உயிரிழந்துள்ளார்.

கொரோனாவால் ஏற்படும் கருப்புப்பூஞ்சை & கொள்ளிக்கண் நோய்! எச்சரிக்கை 👇




Updated On: 20 May 2021 5:07 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  2. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  3. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  7. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  8. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  9. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  10. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!