/* */

தென்காசியில் கேரள மருத்துவர்களைக் கொண்டு பல்வேறு நோய்களுக்கு உயர்தர சிகிச்சை

கீல்வாதம் மூட்டு நோய் மூச்சுத்திணறல் ஒவ்வாமை தோல் நோய்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன

HIGHLIGHTS

தென்காசியில் கேரள மருத்துவர்களைக் கொண்டு பல்வேறு நோய்களுக்கு உயர்தர சிகிச்சை
X

கேரளாவில் 70 வருட பாராமபரியமிக்க கே. எம். கே. ஆயுர்வேதா மருத்துவமனை மற்றும் தென்காசி மர்ஹூம் அப்துல் ரஹ்மான் குடும்பம் இணைந்து நடத்திய மருத்துவ முகாம்

தென்காசியில் கேரள மருத்துவர்களைக் கொண்டு பல்வேறு நோய்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது

கேரளாவில் 70 வருட பாராமபரியமிக்க கே. எம். கே. ஆயுர்வேதா மருத்துவமனை மற்றும் தென்காசி மர்ஹூம் அப்துல் ரஹ்மான் குடும்பம் இணைந்து ஹமீதிய்யா நடுநிலைப்பள்ளியில் மாபெரும் இலவச மருத்துவ முகாமை நடத்தினர். முகாமிற்கு மும்தாஜ் அலி தலைமை தாங்கினார். காவல் காதர் மைதீன் முகாமினை துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாழர்களாக தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் ,நகர் மன்ற தலைவர் சாதிர்,மஸ்ஜிதுல் முபாரக் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் ஹாஜி அப்துல் கபூர், எஸ் டிபி ஐ கட்சியின் மாவட்ட பொருளாளர் செய்யது மஹ்மூத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முகாமில் மருத்துவர்கள் மைதீன் குஞ்சு லெப்பை,முஹம்மது சுஹைல், தவ்சிப் முஹம்மது ஆகியோர் நோயாளிகளை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். முகாமில் கீல்வாதம் மூட்டு நோய்கள் மூச்சுத்திணறல் ஒவ்வாமை தோல் நோய் போன்ற நோய்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சமூக ஆர்வலர் அஹமதுஷா சிறப்பாக செய்திருந்தார்.முகாமில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர் . முகாம் தன்னார்வலர் சுபைர் நன்றி கூற இனிதே நிறைவுற்றது.

Updated On: 6 Jun 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு