/* */

தென்காசியில் அரசை கண்டித்து சுகாதார துறை ஆய்வாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசியில் பொதுசுகாதாரத்துறை அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

HIGHLIGHTS

தென்காசியில் அரசை கண்டித்து சுகாதார துறை ஆய்வாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
X

தென்காசியில் பொதுசுகாதாரத்துறை அனைத்து சங்ககூட்டமைப்பு சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தென்காசியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொது சுகாதாரத்துறை அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசை கண்டித்து பொது சுகாதாரத் துறை மாநிலத் தலைவர் கங்காதரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட சுகாதார ஆய்வாளர்களை பணியிலிருந்து விடுவிக்க உத்தரவிட்ட தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டது

தற்போது மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 2448 சுகாதார ஆய்வாளர்களை எடுக்கும் போது ஏற்கனவே பணிபுரிந்த 1646 சுகாதார ஆய்வாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பணி நியமனம் செய்ய இருக்கின்ற சுகாதார ஆய்வாளர்களுக்கு குறைந்தபட்சம் 20 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்திட வேண்டும் என்றும் 9 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வரும் சுகாதார ஆய்வாளர் நிலை 2அவர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இருப்பதை கண்டித்தும் மற்றும் அதனைத் தொடர்ந்து விரைவில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்று உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Dec 2021 1:33 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது