/* */

புளியரை சோதனைச்சாவடியில் ரூ. 21 ஆயிரம் லாட்டரி சீட்டு பறிமுதல்

புளியரை சோதனைச்சாவடியில் ரூபாய் 21 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

புளியரை சோதனைச்சாவடியில் ரூ. 21 ஆயிரம் லாட்டரி சீட்டு பறிமுதல்
X

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு லாட்டரி சீட்டுகள் போன்றவற்றை கொண்டு வருவதை முற்றிலும் தடுக்கும் விதமாக, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில், சோதனைச்சாவடிகளில், காவல் துறையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள புளியரை சோதனைச்சாவடியில், சார்பு ஆய்வாளர் முத்து கணேசன் மற்றும் காவலர் சாகுல் ஹமீது ஆகியோர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் விற்பனைக்காக சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை கேரளாவில் இருந்து தமிழகம் கொண்டு வந்த கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சித்திரை கண்ணு என்பவரின் மகன் வேலுச்சாமி (56) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 21,600 மதிப்பிலான 540 லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On: 4 Dec 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  5. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  6. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  7. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  8. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  9. செய்யாறு
    திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவினர் தண்ணீா் பந்தல்கள் திறப்பு
  10. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...