சிவகங்கை: பக்ரீத் பெருநாளை முன்னிட்டு கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க சிறப்பு தொழுகை

கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டி சிவகங்கையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிவகங்கை:  பக்ரீத் பெருநாளை முன்னிட்டு கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க சிறப்பு தொழுகை
X

சிவகங்கை வாலாஜா நவாப் ஜும்மா பள்ளிவாசலில் பக்ரீத் பெருநாளை முன்னிட்டு, கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர்.

சிவகங்கை வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசலில் பக்ரீத் பெருநாள் தொழுகை இன்று காலை 7-30 மணிக்கு, நேரு பஜாரில் உள்ள வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது. பக்ரீத் பெருநாளை முன்னிட்டு கொரோனா தொற்றிலிருந்து அனைத்து சமுதாய பொதுமக்களையும் காப்பாற்ற வேண்டும் என்று பள்ளிவாசல் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இமாம் மௌலானா முஹம்மது ஆபிதீன் தலைமை வகித்து நடத்தினார். பள்ளிவாசல் நிர்வாக தலைவர் அன்வர் பாஷா அனைத்து மக்களுக்கும் பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்தார். பள்ளிவாசல் துணை இமாம் அஹம்மது ரிபாய் சிறப்பு பிரார்த்தனை செய்தார். இந்த தொழுகையில் சிவகங்கை நகர் இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு, அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

Updated On: 21 July 2021 4:16 AM GMT

Related News