/* */

சிவகங்கையில் 300 கி.மீ தொலைவுக்கு தூர்வாரும் பணி: ஆட்சியர் தொடக்கம்

வருகின்ற வடகிழக்கு பருவமழையின் போது குளங்கள் மற்றும் கண்மாய்களில் முழு அளவு தண்ணீர் தேக்கும் விதமாக பணி தொடங்கியுள்ளது

HIGHLIGHTS

சிவகங்கையில்  300 கி.மீ தொலைவுக்கு தூர்வாரும் பணி: ஆட்சியர் தொடக்கம்
X

சிவகங்கையில் நடைபெற்ற தூய்மைப்பணி முகாமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி

சிவகங்கை மாவட்டத்தில் 300 கி.மீ. தொலைவுக்கு மாபெரும் தூர்வாரும் பணியினை ஆட்சியர் மதுசூதன் ரெட்டி துவக்கி வைத்தார்.

வருகின்ற வடகிழக்கு பருவமழையின் போது குளங்கள் மற்றும் கண்மாய்களில் முழு அளவு தண்ணீர் தேக்கிடும் விதமாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், நகராட்சி , பேரூராட்சி , ஊரகப்பகுதிகள் ஆகியவற்றில் இன்று முதல் வரும் 25 வரை ஒரு வார காலத்திற்கு மாபெரும் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

இதனை செயல்படுத்தும் விதமாக, சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை, காரைக்குடி, தேவக்கோட்டை ஆகிய நகராட்சிகளிலும், 12 பேரூராட்சிப்பகுதிகளிலும், 445 ஊராட்சிகளிலும் தூர்வாரும் பணி நடைபெறவுள்ளது. முதலாவதாக, சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி அருகே மாபெரும் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி துவக்கி வைத்தார்.

பின்னர் ஆட்சியர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் 3 நகராட்சிகளிலும் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ள தாகவும், இதன் மூலம் மழைக்காலத்தில் பெறுகின்ற தண்ணீர் விவசாயத்திற்கு பயன்பெறு வதுடன், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திடவும், குடிநீர் தேவைகளுக்கும் இத்தகைய திட்டம் பயனுள்ளதாக இருக்கும் . மழைக் காலங்களில் நகரில் தண்ணீர் தேங்காமல் வடிகால் வாய்க்கால் வழியாக குளங்களுக்கு செல்ல இத்திட்டம் பயனளிக்கும் என ஆட்சியர் தெரிவித்தார்,

Updated On: 20 Sep 2021 10:14 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது