/* */

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான உணர்வுகள் ஒருங்கிணைப்பு சிகிச்சை பூங்கா திறப்பு

Political News Today - அரசு மருத்துவமனையில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான உணர்வுகள் ஒருங்கிணைப்பு சிகிச்சை பூங்கா திறந்து வைக்கப்பட்டது

HIGHLIGHTS

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான உணர்வுகள் ஒருங்கிணைப்பு சிகிச்சை பூங்கா திறப்பு
X

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள முழு உடல் பரிசோதனை மையத்தில் ஆய்வு செய்த சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி. உடன் எம்எல்ஏ முத்துராஜா,  ஆட்சியர் கவிதா ராமு

Political News Today -புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையம் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான உணர்வுகள் ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சை பூங்காவை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் வசதிக்காக, உணர்வுகள் ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சை பூங்கா, வலையுடன் கூடிய இரும்பு பாலம், முழுஉடல் பரிசோதனை மையம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுடுதண்ணீர் வழங்கும் மையம், அவசரகால 108 வாகனத்திற்கான நிழற்குடைகளையும், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி (21.07.2022) திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக ரூ.14 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, உணர்வுகள் ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சை பூங்காவில் குழந்தைகளுக்கு தொடு உணர்வினை அதிகரிக்க 8 வடிவிலான நடைபாதை, வெவ்வேறு வடிவிலான நடைபாதைகள், மகிழ்ச்சியுடன் இருப்பதற்காக ஊஞ்சல், சருக்கு விளையாட்டு, வெவ்வேறு ஒலி உணர்வை உணரக் கூடிய ஒலி எழுப்புவதற்கான தகடுகள், நுண்ணறிவிற்கான வரைப்படம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.இம்மையத்தில் பிறவி குறைபாடு, காது கேளாமை, பார்வை குறைபாடு, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், ஊட்டச்சத்து மற்றும் மரபணு குறைபாடுடைய குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அக்குழந்தைகளுக்கு சிறப்பு நிபுணர்களால் சிகிச்சை வழங்கப்படவுள்ளது.

மேலும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கட்டடங்களை இணைக்கும் வகையிலும், குரங்குகள் கட்டடத்திற்குள் உட்புகாத வகையிலும் அமைக்கப்பட்டுள்ள வலையுடன் கூடிய இரும்பு பாலம் மற்றும் முழுஉடல் பரிசோதனை மையத்தினை திறந்து வைத்து, ரூ.250 மதிப்பீட்டில் இரத்த அணுக்கள், இரத்த சர்க்கரை, இரத்த உப்பு, கல்லீரல் சம்மந்தப்பட்ட பரிசோதனை, கொழுப்பு சம்மந்தப்பட்ட பரிசோதனை, சுருள் படம், கதிர் நெஞ்சுப் படம், ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்டவைகள் பரிசோதனைகள் மேற்கொள்வது குறித்தும் மருத்துவர்களுடன் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் அவர்கள் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வருகைதரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுடுதண்ணீர் வழங்கும் மையத்தினை திறந்து வைத்தும், அவசரகால 108 வாகனம் எளிதாக சென்றுவரும் வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நிழற்குடைகளையும் பயன்பாட்டிற்கு மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா , அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், இருக்கை மருத்துவர் இந்திராணி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 July 2022 9:54 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்