/* */

உலக சுற்றுலா தின போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பரிசு வழங்கல்

பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பலருக்கு பலவிதமான போட்டிகள் நடத்தப்பட்டது

HIGHLIGHTS

உலக சுற்றுலா தின போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பரிசு  வழங்கல்
X

 உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு. பரிசுகளை வழங்கினார் 

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.பரிசுகளை வழங்கினார்.

புதுக்கோட்டைமாவட்டத்தில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலா துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பலருக்கு பலவிதமான போட்டிகள் நடத்தப்பட்டது.அதில், ஓவியப்போட்டி கட்டுரை , பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

அதுமட்டுமல்லாமல், உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மாரத்தான் சைக்கிள் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டது. அதேபோல், மாவட்ட நிர்வாகம் சார்பில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களாக கருதப்படும் நார்த்தாமலை சித்தனவாசல், ஆவுடையார் கோயில், திருமயம் மலைக்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு பல்வேறு இடங்களுக்கு வாகனம் மூலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுற்றுலா மூலம் அனைவரும் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதேபோல், பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவருக்கு, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.


Updated On: 11 Oct 2021 11:55 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது