கரும்பு தோட்டத்தில் பயங்கரத் தீ - ரூ.1 லட்சம் கரும்புகள் நாசம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, கரும்புத் தோட்டத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், ரூ.1 லட்சம் மதிப்புள்ள கரும்புகள் எரிந்து நாசமாகின.

HIGHLIGHTS

 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிஅருகேயுள்ள மழவராயன்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (48). இவர் தனக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலப் பரப்பளவில் கரும்பு பயிரிட்டு உள்ளார். நள்ளிரவில், திடீரென கரும்புத் தோட்டத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தன.

இதனைக்கண்ட, அவ்வழியாக சென்றவர்கள் ஆலங்குடி தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

இருப்பினும், 1 ஏக்கர் பரப்பளவில் உள்ள சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான கரும்புகள் தீக்கிறையாகின. இதுகுறித்து, சம்பவ இடத்திற்கு சென்ற ஆலங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 29 April 2021 8:52 AM GMT

Related News