/* */

கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் நோட்டாவுக்கு ஓட்டு

நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இதுவரை உரிய இழப்பீடு தொகை வழங்கப்படா வில்லை என கூறி வரும் சட்டமன்ற தேர்தலில் நோட்டாவிற்கு வாக்களிக்கப் போவதாக மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்...

HIGHLIGHTS

நீலகிரி : கோத்தகிரி அருகே உள்ள மிளித்தேன் பகுதியில் மலை மாவட்ட சிறு விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் செயற்குழு கூட்டம் தலைவர் தும்பூர் ஐ போஜன், மாநில பொதுச் செயலாளர் குல்லா கவுடர் வினோதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு விவசாயிகள் தேயிலை மற்றும் மலை காய்கறிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் பெரும்பாலும் வனப்பகுதியை கொண்டுள்ளதால் அவ்வப்போது வனப்பகுதியை ஒட்டி உள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நுழைந்து மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் நுழைவதை வனத்துறையினர் கண்காணித்து வனவிலங்குகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட வேண்டும்,

தமிழக அரசு வன விலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

தனியார் தோட்டங்களில் வளர்க்கப்படும் சில்வர் ஓக் மரங்களை விவசாயிகளே வெட்டி விற்க அனுமதி தர வேண்டும், தமிழகத்தில் உள்ள அனைத்து விளை நிலங்களுக்கும் தனி பட்டா பாஸ்புக் வழங்க வேண்டும்.

இந்த நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவோம் என வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்போம் இல்லை என்றால் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைமாவட்ட சிறு விவசாயிகள் நோட்டாவிற்கு வாக்களிப்போம் என தெரிவித்தனர்.

Updated On: 29 March 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  5. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  7. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  8. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு