/* */

வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகளுக்கு இலவச தேக்கு மரக்கன்றுகள் விநியோகம்

நாமக்கல் மாவட்ட வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகளுக்கு இலவச தேக்கு மரக்கன்றுகள் விநியோகம் நடைபெற்றது,

HIGHLIGHTS

வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகளுக்கு  இலவச தேக்கு மரக்கன்றுகள் விநியோகம்
X

நாமக்கல் மாவட்ட வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு இலவசமாக தேக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்ட வேளாண்மை அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாமக்கல் வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மை, உழவர் நலத்துறையின் மூலம் தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் மற்றும் புதிய வேளாண்காடுகள் வளர்ப்புத்திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் விநியோகிக்கப்படுகின்றது.

முதற்கட்டமாக 3,100 தேக்கு மரக்கன்றுகள் வனத்துறையின் நாற்றங்கால்களிலிருந்து பெறப்பட்டு, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. நாமக்கல் ஒருங்கிணைந்த விரிவாக்க மையத்தில், வேளாண்மை உதவி இயக்குநர் அன்புச்செல்வி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வனத்துறை அலுவலர் முருகவேல் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். வேளாண்மை அலுவலர்கள் சித்ரா, ரசிகப்ரியா, உதவி வேளாண்மை அலுவலர்கள் கோபிநாத்,சதீஸ்குமார், திலீப்குமார், மாலதி மற்றும் கமலி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்

இம்மரக்கன்றுகளை வரப்பில் நடவு செய்வதாக இருந்தால், ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளுக்கு மிகாமலும், விவசாய நிலங்களில் குறைந்த செறிவில் நடவு செய்வதாக இருந்தால் ஏக்கருக்கு 160 மரக்கன்றுகளுக்கு மிகாமலும் வழங்கப்படுகின்றது மேலும், நடவு செய்த 2-ம் ஆண்டுமுதல் 4-ம் ஆண்டு வரை நல்ல முறையில் பராமரிக்கப்படும். கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.7 வீதம் 3 ஆண்டுகளுக்கு ரூ.21 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகின்றது. இம்மரக்கன்றுகள் நன்கு வளர்ந்து அறுவடை செய்யும் போது,வனத்துறையின் அனுமதியை விவசாயிகள் எளிதில் பெறும் வகையில், நடவுசெய்த மரக்கன்றுகள் அனைத்தும் வருவாய்த் துறையின் அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 2 Oct 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  7. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  8. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  9. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  10. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!